87
சாந்தியின் சிகரம்
மென்று ஏமாற்றி விட்டுச் சென்றிருப்பதாக ஒரு ஆவேசம் உண்டாகியதால்…, “உஷா! நீ வருந்தாதே! நான் வீட்டிற்குப் போய் என்ன விஷயம் என்று கண்டு கொண்டு வருகிறேன். இந்த விஷயத்தில் நான் சும்மா இருக்கப் போவதில்லை” என்று கூறிக் கொண்டே, மிகவும் ஆத்திரத்துடன் எழுந்து சென்றான். உஷா தேவிக்கு இது காறும் இருந்த சந்தோஷம், திடீரென்று மாறிப் போய், அவளுக்கு ஒன்றுமே புரியாத ரகஸியமாய் பூகம்ப அதிர்ச்சி போல் தோன்றி வாட்டத் தொடங்கியது.
13
“என்ன ஆச்சரியம் அண்ணா! நம் பிதாவின் செய்கை இத்தனை மோசமானதா! எங்களால் நம்பவே முடியவில்லையே… அம்மாவின் நீங்காத வருத்தத்தின் காரணம் இப்போதல்லவா தெரிகிறது…” என்று வியப்பே வடிவமாய் இந்திராவும், சந்திராவும் ஸ்ரீதரனிடம் கேட்டார்கள்.
ஸ்ரீதர:-(சிரித்துக்கொண்டே) உம். இந்த விஷயம் உங்களுக்குப் புதிதாக இருப்பதால், ப்ரமாதமான ஆச்சரியப்படுகிறீர்கள். எனக்கு இந்த விஷயம் ஆறிப் புளித்துப் போய் விட்டதேயாகும். சொன்னால், வெட்கக்கேடு: கூடுமான வரையில், நான் அவரால் நிராதரவான நிலையில் உள்ள அனாதைகளுக்கு உதவியும் செய்து வருகிறேன். இந்தம்மாள் தேவதாசி குலத்தவளாகையால், பரம்பரை செல்வம் சிறிதிருந்திருக்க வேண்டும். கச்சேரி செய்தும், சினிமா நடித்தும் செல்வச் சீமாட்டியாயிருக்கிறாள். நான் முதலில் வாசலில் அந்த உஷாவைப் பார்த்த போதே, என்னை அறியாத சந்தேகம் தட்டியது. நம் தாமோதரனின் சாயலே இவளுக்கும் இருக்கிறதே, சந்திராவைப் போலவே இவளும் பேசி, குறுகுறுப்பாய்ப் பார்க்கிறாளே… என்று எண்ணி இமை இசைக்காமல் பார்த்தேன்; அதீதமான நாகரீகத்தையும், நடத்தையையும் நான் வெறுத்தேன். இதை எப்படி தட்டிக் கழிக்கப் பார்க்கலாம்? என்று