உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை மு. கோ.103-வது நாவல்

88

யோசித்தேன். கடவுளே என் பங்கிலிருந்து ஒரேயடியாக மாற்றி விட்டார். அம்மாவுக்கும் அது மிக சந்தோஷமாகி விட்டது. தம்பி வந்த பிறகல்லவா இருக்கிறது விஷயம்.

இந்தி:- என்ன அண்ணா! நம் பிதாவின் நடத்தை அத்தனை மோசமானதாகவா இருந்தது.

சந்தி:- இதென்ன கேள்வி இந்திரா! மோசமானதாக இல்லை என்றால், இத்தகைய விதி அவருக்கு வருமா! ஏதோ, நாம் செய்த பாக்யம் நம் மாமியார் வீடுகளில் நாம் கவுரவமாக வாழ்கிறோம். அதற்கும் அண்ணாதான் காரணம்; பெரிய அண்ணாவுக்குள்ள பாரபுத்தியும், கவுரவமும், படிப்பும், சாந்தமும் சின்னவனுக்கு இருக்கிறதா! அதுவும் குடும்பத்து சாபந்தான் என்று சொல்லும்போது, “குடும்பத்து சாபமாம் சாபம்! எந்த அதிசயமான சாபத்தைக் கண்டு, இப்படி எல்லோரும் அத்தனை பெரியவர்களின் முகத்திலடித்தது போன்று, அவமானப் படுத்தி விட்டு, எழுந்து வந்தீர்கள். வேண்டுமென்று என்னை மட்டந் தட்டி, ஏளனம் செய்வதற்காகவா நீங்கள் வந்தீர்கள். அவர்களுடைய நாகரீகத்தைக் கண்டு ப்ரமித்தபோதே, நான் நினைத்தேன்…”

“தம்பீ! பதறாதேப்பா! நாகரீகமோ! படாடோபமோ! எதுவாயினும் சகித்துக் கொண்டு, உன்னிஷ்டத்தை நிறைவேற்றவே நினைத்தேன். பிறகு அவர்கள் தேவதாசி குலத்தவர்கள் என்று தெரிந்தது. அதைக் கூட உனக்காகப் பொறுத்து, உன் சந்தோஷத்தையே நிறைவேற்ற எண்ணினேன். ஆனால் உன்னுடன் பிறந்த சகோதரியையே நீ மணப்பதென்றால், அது எந்த தெய்வத்திற்கு அடுக்கும் தம்பீ ! உஷா இனி உன் சகோதரி, உன் ப்ரேமைவல்லி இல்லை! இதோ பார் புகைப்படங்கள்!” என்று அழுத்தமாகக் கூறியபடியே ஆல்பத்தைக் காட்டினான்.

“என்ன ! உஷா என் சகோதரியா ! என்ன அண்ணா உளறுகிறாய்…” என்றபடியே ஆல்பத்தைப் பார்த்தான்.