பக்கம்:சாமியாடிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

99

ஒரு தொழிலாளி பெண்ணாய் இல்ல. ஒரு தொழிலாளியாய் மாறிடுறேன். சாதிக்கட்டை விட்டு. சாதியற்ற மனித சாதி கட்டுக்குள்ளே போகிறதுக்கு முயற்சி செய்யுறேன். இதனால்தான் பிடி ஏசெண்ட திட்டுனதுக்கு சம்மதிச்ச தோழிகள் மேல கோபம் வரலை. குட்டாம்பட்டில கண்ணாடிக்காரர், பீடி சுத்தும் பெண்களுக்கு சங்கம் வச்சுருக்கது மாதிரி நானும் வைக்கத்தான் போறேன்.”

"அய்யய்யோ சங்கமா..."

"என் ஊர்ல. உருப்படாத பயல்க எல்லாம் உதவாக்கரை சினிமாப் பயல்களுக்கு சங்கம் வைக்கும்போது. நான் ஏன் வைக்கப்படாது."

"அப்படின்னா நீ பழையபடியும் அங்கே போய் பீடி சுத்தணும்."

"நான் தயார். ஆனால் இப்போதைக்கு சாதி மயக்கத்துல இருக்கும் தோழிகள் அந்த மயக்கம் கலைஞ்சதும். அவங்க என்னை கூப்பிட வேண்டியதில்ல. நானே போய்ச் சேருவேன்."

"ஒன் கஷ்டத்தை கேட்கிறதுக்கு மனசுக்கு கஷ்டமாய் இருக்கு. நான் உயிரோட இருக்கது வரைக்கும் நீ சிரமப்படக்கூடாது. இந்தா நூறு ரூபாய். ஒன்மேல தான் சதா எனக்கு நெனப்பு ரஞ்சிதம். நீ இல்லாமல் என்னால வாழ முடியாது ரஞ்சி. அட கடவுளே. எப்ப பார்த்தாலும் ஒன் முகந்தான் கண்ணு முன்னால நிக்குது. இந்த ரூபாய் என் அன்பு காணிக்கை. நான் இருக்கிற வரைக்கும் நீ கவலைப்படக்கூடாது. கஷ்டப்படக்கூடாது."

"அதாவது நீங்க என்னை வைப்பாட்டியாய் வச்சுக்குவீங்க. காலமெல்லாம்."

"என்ன ரஞ்சிதம். நான் ஒன்னை அப்படி நினைச்சுப் பார்க்கவே முடியாது. ஏதோ ஒரு அன்பு. காதலுன்னு வச்சுக்கயேன். நீ என் ஆபுசுவரைக்கும் துணையாய் இருக்கணுமுன்னு ஏதோ ஒரு ஆசை."

"மொதல்ல. ஏதோ என்கிற வார்த்தைய எடுங்க. நான் ஆயுள் வரைக்கும் ஒங்களுக்கு துணையாய் இருக்கத் தயார். நீங்க ரயில்வே கேட்ல கேட்டதை அதனாலதான் பெரிசா எடுத்துக்கலே. ஒங்களை நானும் விரும்புறேன். நேசிக்கிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/101&oldid=1243545" இலிருந்து மீள்விக்கப்பட்டது