பக்கம்:சாமியாடிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

சு. சமுத்திரம்

"நான் கொடுத்து வச்சவன்."

"முதல்ல என் தோளில இருக்கிற கைய எடுங்க. அதுக்கு முன்னால நான் சொல்றதைச் செய்யுங்க... இதோ இருக்கு மஞ்சள்துண்டு. இதோ இருக்கு மந்திரிக்கிறதுக்காக நான் விற்கிற கயிறு. இந்த கயித்துல. மஞ்சள் துண்டைக் கட்டி, இந்த முருகன் சாட்சியாய் என் கழுத்துல கட்டுங்க. உடனே என்னை ஓங்க வீட்டுக்கு கூட்டிப் போங்க. ஒங்க அப்பாகிட்ட ஒங்களால பேச முடியாட்டாலும் நானே பேசிக்கிறேன்."

"அதெப்படி. திடுதிப்புன்னு யோசிக்காமல்.’

"என்னை எப்படி யோசித்து விரும்பலியோ. அப்படி யோசிக்காம தாலியக் கட்டுங்க... காதலிக்கதுக்கு யோசிக்கப்படாது. கல்யாணத்துக்கு மட்டும் யோசிக்கணுமா. ஒங்கள மாதிரிதான் நம்ம நாட்ல. பல காதலர்கள் காதலிகள். காதல் என்பது வாழ்க்கைக்காக போடப்பட்ட வழி. இந்த பிரதான வழியில் குறுக்கு வழிகள். தற்கொலை வழிகள். கொலை வழிகள்னு பல கிளை வழிகள் இருக்கு. இவற்றை விட்டுட்டு பிரதான வழியில் போனால் தான் வாழ்க்கையைச் சுவைக்க முடியும். இல்லன்னா சுமக்கணும். எல்லாப் பெண்களும். தங்களோட காதல் வெளிப்பாட்டைக் காட்டுறதுக்கு முன்னால. இப்போ நான் ஒங்ககிட்ட கேட்கிற கேள்வியை கேட்டிருந்தால் ஒன்னு காதலே வந்திருக்காது. இல்லன்னா தோல்வி என்பதே வந்திருக்காது. இந்த பிரதான வழியில் தெரிகிற வாழ்க்கை வீட்டைப் பார்த்தால், கிளை வழிகளில் இருக்கிற கிணறோ, குளமோ, குட்டையோ, கத்தியோ கம்போ தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. நான் இல்லாமல் ஒங்களால் வாழ முடியாதுன்னா. இதோ என் கழுத்து. நான் கழுத்துக்கு முதலிடம் கொடுக்கிறவள். கன்னத்துக்கு இரண்டாவது இடம். என்ன சம்மதமா. எனக்குச் சம்மதம்."

திருமலை தடுமாறிப் போனான். அந்த ஆடிக்காற்றிலும் அவன் உடம்பு வியர்த்தது. அவனால் நேருக்கு நேராய்ப் பார்க்க முடியவில்லை. எதையுமே விஞ்ஞான பூர்வமாய் சிந்திக்கும்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/102&oldid=1243547" இலிருந்து மீள்விக்கப்பட்டது