பக்கம்:சாமியாடிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

103


"எனக்கு எப்டிடா நீ சிமெண்ட் இல்லன்னு சொல்லலாம்.?” "நீ எப்டிடா கேட்கிற விதமா கேட்காமல் இருக்கலாம்.?”

"நான் எப்படிக் கேட்டா ஒனக்கென்னடா..? ஒனக்குத் தேவை. பணம்தானடா",

"அதுக்கு ஒன் காலுல சிமெண்ட் மூட்டையை போட்டுட்டு கும்பிட முடியுமா? ஒனக்கு சிமெண்ட் வேணுமுன்னா என் கடையில வந்து தான் கேட்கணும். தெருவுல வந்து கொடுக்க நான் ஒன் வேலைக்காரன் இல்ல."

"நீ இந்த ஊருக்கு நல்ல முறையில எல்லாருக்கும் சிமெண்ட் கொடுக்கறதுக்காக ஒனக்கு ஏஜென்சி கொடுத்திருக்காங்க. நீ எடுக்காட்டா நான் எடுத்திருப்பேன். அதனால நீ எனக்கு இப்பவே இந்த இடத்துலயே. சிமெண்ட் மூட்டய தந்தாகணும். இல்லன்னா, நான் உன்னை விடப்போறதாய் இல்ல."

"நீ இவ்வளவு சொன்ன மட்டும் நான் ஒனக்கு சிமெண்ட் தரப்போறதாய் இல்ல. எப்போ தந்தாலும் தருவேன். ஆனால் இப்போ தலையே போனாலும் தரவே மாட்டேன்."

"தராட்டா எடுப்பேன்." "எடுக்கிற கைய ஒடிப்பேன்."

"பாத்துப்புடலாண்டா..."

"பாத்துக்கிட்டே இருடா.

வேலையாட்கள் செம்பட்டையான் கரும்பட்டையான் ஆகிய இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆகையால், தத்தம் சேவல்களுக்கு ஆதரவாய் உடம்பை நிமிர்த்தியபோது -

திருமலை, இரும்புக் கால்களை எட்டாக்கிக் கடைக்குள் நுழையப் போனான். துளசிங்கம் தனது குஸ்திக் கைகளால் அவனை மல்லாக்கத் தள்ளியபோது, கீழே விழப்போன திருமலையை, கரும்பட்டையான் வேலையாள் தாங்கிக் கொண்டான். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/105&oldid=1243560" இலிருந்து மீள்விக்கப்பட்டது