பக்கம்:சாமியாடிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

சு. சமுத்திரம்

"கரும்பட்டையான் வம்சத்துக்கு முன் வச்ச காலை பின் வச்சு பழக்கமில்ல. அந்தப் பழக்கத்தை மாத்திக்கவும் தயாராய் இல்ல."

"சரி வந்து பாருங்க.."

இந்த சண்டைக்கு மூன்றாவது கனபரிமாணமாக, காத்துக் கருப்பன் குடும்பத்து அதே அந்த ராமையா கோபாவேசமாகப் பேசினார். சூதுவாதில்லாத மனிதர்தான். கோலவடிவை, அக்னி ராசாவுக்கு திருமணம் செய்யும் உறுதியோடு அவர் பேசவில்லைதான். ஆனாலும் பழனிச்சாமி மச்சான் மேல் புதிதாக வந்த பாசம் அவரை இப்படிப் பேச வைத்தது.

"ஏய் துளசிங்கம்! நீ பேசுறது அக்கிரமண்டா. ஒன் கடை உரத்த வயலுல போட்டு இப்போ பயிரெல்லாம் சாவியா போயிட்டு."

"சிமெண்டுக்கும், உரத்துக்கும் என்ன சம்பந்தம்." "எங்க அண்ணாச்சிய பேச விடுடா. பேமானிப்பயல அவரு யாரோடயும் பேசாதவர். இப்பவாவது பேசட்டும்."

"ஒரே வார்த்ததான் பேசப் போறேன். துளசிங்கம் கடை பொதுக் கடை சாமியை நம்பாதவன் கற்பூரம் விற்கதுமாதிரி இவன் பிடிக்காத, திருமலைக்கும் சிமெண்ட் மூட்டைய கொடுத்தாகணும். இல்லன்னா கடையை உடைச்சாகணும்."

காத்துக் கருப்பன்கள் பைத்தியார தர்மரு. ராமாய்யாண்ணன் பின்னால் கச்சைக் கட்டி, அவரின் இச்சையை நிறைவேற்றத் துடித்தார்கள். ஆனானப்பட்ட அதிகாரிகளையே கெஞ்சியும், மிஞ்சியும் மடக்கிப் போடும் ஒத்தை வீடு காண்டிராக்டர் தாமோதரன் விவகாரியானார்.

"டேய் துளசிங்கம் போனால் போவட்டும். திருமலைக்கு ஒரு மூட்டை சிமெண்டையாவது கொடு."

"இதைவிட என் உயிரக் கேளும் தாரேன்." "உயிரும் இப்போ போகத்தான் போகுது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/108&oldid=1243564" இலிருந்து மீள்விக்கப்பட்டது