பக்கம்:சாமியாடிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

107

ரஞ்சிதம் அடிமேலடியாய் நடந்து, கூட்டதுக்கு முன்னால் வந்து தீர்ப்பளிப்பவள்போல் பேசினாள்.

"நான் எல்லாருக்கும் பொதுப்பிள்ள, அடுத்த சாதி அற்பம். நான் சொல்லுறதக் கேளுங்க. நம்ம யூனியன் காண்டிராக்டர் அய்யா தாமோதரன், முருகன் கோயில் முகப்பு கட்டுறதுக்கு உபயமாய் பத்து மூட்டை சிமெண்ட் வாங்கி துளசிங்கம் கடையிலேயே போட்டிருக்கார். அதுல எத்தன மூட்டை சிமெண்ட வேணுமுன்னாலும் திருமலை அவருகிட்டயே பணத்தக் கொடுத்துட்டு, எடுத்துக்கட்டும். தாமோதரய்யா தன்னோட சிமெண்ட் மூட்டைய எடுத்துக் கொடுப்பாரு.. இதனால துளசிங்கம் மானமும் போகல. திருமலை மானமும் போகல. சிமெண்ட் மூட்டதான் போவுது."

"ரஞ்சிதம் ஒன்னை கொழும்புக்கு அனுப்பி வைக்கணும்."

அந்தத் தீர்ப்பால் எல்லோருக்கும் திருப்தி. ஒரு சில கர்நாடக விவகாரிகள்தான் மனதுக்குள் முனங்கிக் கொண்டார்கள். "போயும் போயும் ஒரு ஒத்தை வீட்டுப் பொண்ணு அடுத்த சாதிக்காரி. சொக்காரப் பலம் இல்லாத ரஞ்சிதமா இந்த வழக்க தீர்த்து வைக்கணும். நாங்க எதுக்கு இருக்கோம்.?”

விவகாரம் தீர்ந்து கொண்டிருந்த போது, அக்கினி ராசாவின் அப்பா ராமய்யாதான் தனது சுபாவத்திற்கு மாறாக விடாப்பிடியாகப் பேசினார்.

"அதுல்லாம் முடியாது. தாமோதரன் சிமெண்ட் விற்றுப் போன சிமெண்ட். துளசிங்கந்தான் அவன் கையால வேற சிமெண்ட்ட கொடுக்கணும்.”

தாமோதரன், ராமைய்யாவின் மோவாயைத் தூக்கி, தன் உள்ளங்கையில் தாங்கிக் கொண்டே மன்றாடினார்.

"போவட்டும் மச்சான். போவட்டும் ரெண்டு தரப்புமே சம்மதிச் சுட்டாங்க. நமக்கென்ன வம்பு. டேய் துளசிங்கம். என் சிமெண்ட் மூட்டையை தனியா ஒதுக்கு. இந்தாடா திருமலை நூற்றி எண்பத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/109&oldid=1243565" இலிருந்து மீள்விக்கப்பட்டது