பக்கம்:சாமியாடிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

சு. சமுத்திரம்

நாலு ரூபாயும் முப்பது பைசாவையும் எடு. என்கிட்டயே கொடு. சிமெண்ட்டோட விலை. வயசுப் பொண்ணு வளத்தி மாதிரி கூடிக்கிட்டே போவுது. இன்னைய ரேட்டுப்படி. மீதிக் கணக்கு அப்புறம் பார்த்துக்கலாம்."

"ஆமா தெரியாமத்தான் கேக்கேன். நீரு விவகாரியா. இல்ல வியாபாரியா. மாப்பிள்ளே."

திருமலை சட்டைப் பையைத் துழாவினான். வேட்டியைத் தூக்கி, டவுசர் பைக்குள் கைவிட்டான். அப்போதுதான். அவனுக்கு உறைத்தது. வெறும் கையில் முழம் போட்டிருக்கான். இந்தச் சமயத்தில் யாரிடமாவது பணம் கேட்டால், தான் துளசிங்கத்திடம் வம்புச் சண்டைக்குப் போனதாக அர்த்தமாகிவிடும். திருமலை என்ன செய்வது என்று புரியாமல் விழித்தபோது, துளசிங்கம் புரிந்து கொண்டான். திருமலை வம்புச் சண்டைக்கே வந்தவன் என்பதை நிரூபிப்பதற்காக, அவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு 'சபையிடம் முறையிடப் போனபோது -

திருமலை அண்ணாவின் தடுமாற்றத்தைப் புரிந்துகொண்ட கோலவடிவு, அண்ணனின் அருகே வந்து, முந்தானையில் மடித்து வைத்திருந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை திருமலையின் கையில் லாவகமாகத் திணித்தாள். உடனே அவன், அந்த நோட்டுக்களை பத்து ரூபாய் நோட்டாக பயந்து பார்த்து, பிறகு சந்தோஷப்பட்டு தாமோதரனிடம் நீட்டினான்.

துளசிங்கம், கோலவடிவை, பற்களைக் கடித்துப் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/110&oldid=1243567" இலிருந்து மீள்விக்கப்பட்டது