பக்கம்:சாமியாடிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

சு. சமுத்திரம்

"அவன் ரெண்டையும் சொல்ல வர்ல." "பிறகு சொல்லறதுக்கு எதுவுமே இல்லியே."

"கோபப்படாம கேளுங்க. அவன் சொல்ல நினைக்கதைத்தான் நான் சொல்லுறேன். நானாச் சொல்லல."

"நீ எப்பதான் இப்டி நீட்டி முழக்கிப் பேசுறதை விடப் போறியோ_?"

"திருமலைக்கு விவசாயம் பார்த்து அலுத்துப் போச்சாம். அழுக்கு வேட்டியோட அலையுறது பிடிக்கலையாம். அதனாலதான் துளசிங்கத்துக்கு இவனைப் பார்த்தா இளக்காரமாம். அதனால இவனும் ஒரு கடை வைக்கணுமாம். கோணச் சத்திரத்துல இல்லன்னா. நம்ம ஊரு கார் ரோட்ல கமிஷன் கடை வைக்கணுமாம். துளசிங்கம் மாதிரி ஆயிரக் கணக்குல சம்பாதிக்கணுமாம்."

?

"இதை சொல்லப்படாதுன்னு நீயே சொல்லப்படாதா. பாக்கியம்.

"நான் இவன்கிட்டே எவ்வளவோ சொல்லிட்டேன். துளசிங்கப் பயல், அர்த்த ராத்திரில குடை பிடிக்கிறவன். ஆயிரக் கணக்குல சம்பாதிச்சாலும் கடைசில அரியப்புரம் தங்கமுத்து மாதிரி சினிமா எடுக்கேன்னு மெட்ராஸ் போயி. சம்பாதிச்ச பணத்தை எல்லாம் நாசமாக்கப் போறான்னு சொல்லியாச்சு..."

"துளசிங்கமும், நல்லா இருக்கணுமுன்னு நீ நினைக்கணும். நாடெல்லாம் வாழ கேடு ஒன்னும் இல்லை. அதோட துளசிங்கம், நீ நெனக்கது மாதிரி ஏமாளி இல்ல. கெட்டிக்கார பய. வேணுமுன்னால் பாரு பணத்த மேலும் மேலும் சேப்பானே தவிர. சிதைக்க மாட்டான்."

"அப்போ. அவன் உசத்தி. நம்ம பிள்ள மட்டமா..?”

"ஒருத்தன உசத்தியாய்ப் பேசுறதாலேயே, இன்னொருத்தன் தாழ்த்தின்னு அர்த்தமில்ல. இவன் அவனவிட ஒருபடி அதிகமுன்னு எனக்குத் தெரியும. நான். வயல் வேலைய கவனிச்சு எவ்வளவோ நாளாச்சு. இவன்தானே கட்டிக் காத்து வாரான். இவனுக்கு என்ன குற. மோட்டார் பைக் வச்சுருக்கான். எங்கே வேணுமுன்னாலும் போகலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/120&oldid=1243582" இலிருந்து மீள்விக்கப்பட்டது