பக்கம்:சாமியாடிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

119

"ஆனாலும் அவன் கொஞ்சம் மரியாதையோட."

"நீயே அவனுக்கு சொல்லிக் கொடுப்பே போலுக்கே. பாக்கியம். வியாபாரிக்கு மரியாதன்னா நெனக்கே. அதான் இல்ல. இந்தப் பயலுவ அறைக்குள்ள கண்டவன் காலுல்லாம் விழுந்துட்டு, வெளில மேனா மினுக்கியாய் அலையுற பயலுவ. இவனுக்கு கமிஷன் கடை வைக்கேன்னு வச்சுக்க. வைக்கது ஒன்னும் பெரிசில்ல நமக்கு. ஆனால் அப்டி வச்சுட்டா-போலீஸ்காரன் திருட்டு நெல்ல வாங்கிட்டோமுன்னு சும்மா சும்மா வந்து தொல்லை பண்ணிக்கிட்டு, மாமுலுக்கு வருவான். வரி ஆபீஸர் வருவான். லைசென்ஸ் பாக்க வாறேன்னு யூனியன்காரன் வருவான். இவன் ஒவ்வொருத்தன் கையில இல்ல. காலுல பணத்த வைக்கணும். அவனுவ அதட்டுற அதட்டலுக்கு காது கொடுத்து கேட்டு, கொடுக்கிற லஞ்சத்தையும் பிச்சக்காரன் மாதிரி கொடுக்கணும். ஒருத்தனுக்கு பணம் கொடுக்கிறது தப்புல்ல. அதையே கும்பிட்டுக் கும்பிட்டு லஞ்சமா கொடுத்தா அது அடிமைத்தனம். அந்தக் காலத்து குட்டி ராசாக்க பெரிய ராசாவுக்கு கப்பம் கட்டுறது மாதிரி. விவசாயிக்கு அப்டி இல்ல. எந்தப் பயலுக்கும் பதில் சொல்லத் தேவையில்ல. இந்தக் கவுரவம் எவனுக்கும் வராதுன்னு இவனுக்குச் சொல்லு."

'விவசாயத்தையும், வியாபாரத்தையும் ஒண்ணா கவனிச்சுக்கிட்டு.”

"இந்தா பாரு. நீ இப்டிப் பேசுனால், இவன் ஒரு நாளைக்கு வீட்ல இருக்கிற பணத்தை எடுத்துக்கிட்டு மெட்ராஸுக்கோ, மதுரைக்கோ ஒடி சீரழியப் போறான். அதுதான் நடக்கணுமுன்னு நீ நெனச்சால் அப்புறம் ஒன் இஷ்டம். என்னைப் பொறுத்த அளவுல இந்தப் பிலாக்கணம் இதோட முடியுது. சரி சீக்கிரமா காபிக்கு ஏற்பாடு பண்ணு. வரி போடுறதுக்கு ஆளுங்க வர்ற சமயம்."

பழனிச்சாமி, தனது காதுகளைத் திருகினார். ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அவர் அப்படித்தான். திருமலை, உம்மென்று இருந்தான். பாக்கியம் தனக்குள்ளே முனங்கினாள். கோலவடிவு அந்தக் கயிற்றுக் கொடியைக் கீழே இழுத்துப் போட்டபடியே அண்ணாவை ஏமாற்றத்தோடு பார்த்தாள். அம்மாவை, கோபமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/121&oldid=1243587" இலிருந்து மீள்விக்கப்பட்டது