பக்கம்:சாமியாடிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

சு. சமுத்திரம்

பார்த்தாள். அவனுக்காவ எப்டி பேசுறாள். எனக்காவ ஒரு வார்த்த பேசுதாளா... பொண்ணுன்னு வந்துட்டா அம்மாவக்குக்கூட இளக்காரந்தான். அக்னி ராசாவாம் அக்னி ராசா. எரிஞ்சு எரிஞ்சே அணைஞ்சு போற அக்னி.

பாக்கியம் மகள் பக்கத்திற்கு வந்து தனது கோபத்தைக் காட்டினாள்.

"இவ்வளவு தண்டில இருக்கியே..? ஒனக்கு மூள இருக்கா..? தடிமாடு. கொடிய இப்டி பிடிச்சா இழுக்கது.? இன்னா பாரு. அறுந்துட்டு.”

கோலவடிவு பற்றிய கயிற்றுக்கொடி இரண்டாக அறுந்து, அவள் ஒரு பக்கத்து முனையைத் தன்னையறியாமலேயே பிடித்துக் கொண்டு இழுத்திருக்கிறாள். அவளுக்கே தெரியவில்லை. கீழே விழுந்த ஈரச்சேலையையும், காய்ந்த பாவாடையையும் எடுக்கப் போனபோது, அம்மா விரட்டினாள்.

"குளிச்சுட்டு வாரதுக்கு இவ்வளவு நேரமாழா. இனிமேல் பம்ப்செட் பக்கம் போ. ஒன் கால ஒடிச்சுப் புடுறேன். டேய் திருமலை. சாப்புடு ராசா. ஏமுழா இவ்வளவு நேரம்."

கோலவடிவு அம்மாவின் திட்டிற்கு வருத்தப்படவில்லை. வழக்கத்திற்கு மாறாக சந்தோஷப்பட்டாள். ஒரு விஷயத்த சொல்லப் போறாளே.

"ராமய்யா மாமா வயலுல ஒரு சண்டம்மா. துளசிங்கத்துக்கும், அவருக்கும் அடிதடி வராத குறை. அப்புறம் ரெண்டு பேரும் இனஞ்சி போயிட்டாங்க இந்த அக்னிராசாவுக்கு ஒண்ணுமே தெரியலம்மா, துளசிங்கம், வயலுல வாங்குன உரத்தோட இன்னொரு உரத்த கலந்து போடச் சொன்னாராம். இந்த அக்னி ராசா. சரியான அசமந்தமா. பொட்டாசியம் உரத்த, யூரியா உரத்தோட கலந்து, போடாம வயலயே சாவியாக்கிட்டாராம். ராமய்யா மாமா துளசிங்கம் சண்டையில, தனக்கு சம்பந்தம் இல்லாதது மாதிரி நிக்காரு. அக்னிராசா."

"அக்னி ராசா, உத்தமன். யோக்கியன். அப்படித்தான் நிப்பான். துளசிங்கம் மாதிரி அவன் என்ன காவாலிப் பயலா..? பரம்பர பணக்காரன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/122&oldid=1243588" இலிருந்து மீள்விக்கப்பட்டது