பக்கம்:சாமியாடிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

121

கோலவடிவு குன்றிப் போனாள். அறுந்த கொடியைக் கட்டாமல், விழுந்த சேலையை எடுக்காமல், இயக்கமின்றி நின்றாள். இந்தச் சமயத்தில், இருபது இருபத்தைந்து சொக்காரக் கரும்பட்டையான்கள். அவர்களில் ஒருவர் திருமலையைப் பார்த்துக் கேட்டார்.

"ஒங்க வயலுல பம்ப் செட் ஓடிக்கிட்டு இருக்குது. நீ இங்கே இருக்கே..."

கோலவடிவு கைகளை உதறியபோது பாக்கியம் கூப்பாடு போட்டாள்.

"பம்ப் செட்ட ஆப்பு செய்யாம வந்துட்டியா..? எரும மாடு மாதிரி தலை ஆட்டுறாள் பாரு. போழா. சீக்கிரமா வயலுக்குப் போய் ஆப் பண்ணிட்டு வா. இந்நேரம் வயலே மூழ்கியிருக்கும். ஒடுழா. வரவர ஏன்தான் இப்டி பித்துப் பிடிச்சுப் போறியோ..? ஒடுழா. இல்லன்னா வயலு குளமாயிடும்.”

உள்ளே இருந்தவர்கள் பழனிச்சாமி இருந்த தார்சாவுக்குள் போய், பெஞ்சுகளையும் நாற்காலிகளையும் தரையையும் இடமில்லாதபடி நிரப்பினார்கள். பழனிச்சாமி சுவரில் சாய்ந்த தலையை நிமிர்த்தியபடியே கேட்டார்.

“எந்தப் பய மவனுகளோ. நம்ம அம்மனுக்கு முன்னால வீடியோ படம் போடணுமுன்னு சொல்லுதாங்களாமே. எந்தப் பயன்னாலும் இப்பவே சொல்லட்டும்."

"ஒங்க பேச்சுக்கு எதிர்ப்பேச்சு உண்டா. வில்லுல தான் கொஞ்சம்."

"வில்லுலயும் பொம்புள வில்லு கிடையாது. நம்ம அரியப்புரம் வெற்றிக்குமார் வில்லுதான். அவங்க கிடைக்காட்டாதான் அடுத்த வில்லு."

"அப்புறம் மேலும்."

"செட்டு மேளம் வைப்போம். நம்ம ஊரு கணேசன் ரெண்டு தட்டு தட்டட்டும். இந்தத் தடவ குற்றாலத்துல மட்டும் தண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/123&oldid=1243589" இலிருந்து மீள்விக்கப்பட்டது