பக்கம்:சாமியாடிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

சு. சமுத்திரம்

கொண்டு வந்தால் போதாது, தோரணமலை முருகன் கோயில்

சுனையில் இருந்தும் நீரெடுக்கணும்."

"அப்புறம் வரி எவ்வளவு. அண்ணாச்சி."

"ஐம்பது ரூபாய் வரி போதும்."

"எப்டி போதும். இந்த வருஷம் சப்பரம் விடணும். ரிப்பேர் பாக்கவே ஆயிரம் ரூபாய்க்கு மேல ஆவும்."

"ஒனக்கு மூள இருக்காடா. கொத்துகுறைக்கு அண்ணாச்சி கொடுத்துட்டுப் போறார். அம்பது ரூபாய் வளியே அதிகம்."

"சரி. சரி ஐம்பது ரூபாய். சப்பரத்த பழுது பார்த்து அலங்காரம் செய்யுற செலவு என் பொறுப்பு. இன்னும் ஏதும் பாக்கி இருக்கா. பேசுறதுக்கு.? பாக்கியம் காபி கொண்டு வா. திங்கறதுக்கு மொச்சக்கொட்டை பாசிப் பருப்பு எது இருந்தாலும் சீக்கிரம். சிக்கிரம்."

வீட்டுக்குள் தட்டுமுட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது பற்குணம் ஓடி வந்தார். மேலத்தெரு ராமய்யாவின் தம்பி. வம்புச் சண்டைக்கு பழக்கப்பட்டதால் வாலன்' என்று வக்கணை பெற்றவர் முற்றத்தில் நின்றபடியே ஊளையிடுவது போல் பேசினார்.

"ஓங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா. செம்பட்டையான் குடும்பத்துலயும் சுடலைமாடனுக்கு இப்போ வரி போடுதாங்க.. செறுக்கி மவனுவளுக்கு திமிரப் பாருங்க... நீங்க விசேஷம் வச்சிருக்கிற நாளையிலேயே அவங்களும் வைக்கப் போறாங்களாம்."

"வாங்கடா. புறப்படலாம். நம்ம வைக்கிற வெள்ளில் வைக்காண்டாமுன்னு கெஞ்சிப் பார்ப்போம். மிஞ்சுனாங்கன்னா சுடலைமாடன் கோயிலயே தரமட்டமாக்கிடணும். கரும்பட்டை யானுவளப் பத்தி என்னதான் நினைச்சுக்கிட்டாங்க தெத்துவாளிப் பயலுவ..."

எல்லோரும் எழுந்தார்கள். திருமலையும் திமிறியபடியே எழுந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/124&oldid=1243590" இலிருந்து மீள்விக்கப்பட்டது