பக்கம்:சாமியாடிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

சு. சமுத்திரம்

124 சு. சமுத்திரம்

என்றான். அதைப் பார்த்த கோலவடிவுக்கு அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. வரப்பென்று நினைத்து வயல் வழியாக நடந்தாள். குளத்தின் மதகுப் பக்கம் வந்த பிறகு, மீண்டும் கைகளை உதறினாள். பம்ப் செட் அறையை பூட்ட மறந்துட்டேனே.

கோலவடிவு, மீண்டும் நடந்த வழியிலேயே நடந்து, வயல் மேட்டிற்கு வந்து பம்ப் செட் அறையைப் பூட்டினாள். சிறிது தூரம் நடந்தபின், மீண்டும் கைகளை உதறி திரும்பி வந்து சாவியை எடுத்துக் கொண்டாள். அக்னிராசா அவளை சந்தோஷமாகப் பார்த்தான். லேசாய் பாட்டுக்கூட பாடினான். அப்படி பாட்டாக நினைத்து அவன் எதையோ இழு இழு என்று இழுத்தான். இப்படி. அவளைப் பார்ப்பதையும், பாடியதையும் பார்த்த கோலவடிவிற்குக் கோபமும் வந்தது. கூடவே அனுதாபமும் வந்தது. "ஒம்ம எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனால் புருஷனாய் பிடிக்கலன்னு, நேரா போய் நாகரிகமாய் சொல்லிடலாமா.. எம்மாடி. அப்பாவுக்குத் தெரிஞ்சா வெட்டிப் புதச்சிடுவார். அப்புறம் துளசிங்கம் மச்சான் குங்குமம் வச்சதுக்கு அர்த்தமில்லாமப் போயிடும். அவரு கை ராசியில்லாத கையா இருக்காது. இருந்தா கடை இப்படி செழிச்சிருக்காதே."

கோலவடிவு கரை வழியாய் நடந்து, கண்மாய் வழியாய் இறங்கி ஊருக்குள் நுழைந்தபோது, தேவைப்படாதவர்கள் அனைவரும் தென்பட்டார்கள். தேவைப்பட்ட இரண்டே இரண்டு ஜீவன்களைக் காணாததால், அவள் ஜீவனற்றவள் போல் நடந்தாள். எதிர் பார்ப்புடன் வயலுக்குள் ஒடியவள், ஏமாற்றமாக நடந்தாள். அக்கினிராசாவின் ஆக்கிரமிப்புக்கு நடத்தப்பட்ட பேச்சு. அவள் மூச்சை இப்போது தடை செய்தது. அண்ணாவுக்கு என் பொருந்தாத கல்யாணத்தைவிட, கடை வைப்பது பெரிசாப் போயிட்டு. அப்பா என்னடான்னா பட்டும் படாமலும் பதிலளிக்கார். அம்மாவுக்கோ, அக்கினிராசா உத்தமனாம். நான் யார் கிட்ட சொல்ல, எப்படிச் சொல்ல. சும்மா ஆறுதலுக்குன்னாவது சொல்லியாகணும். இல்லாட்டா தலையே வெடிச்சுப் போயிடும். அத்தே. அலங்காளி அத்தே.

ஊரில் பள்ளிக்கூடத்திற்கு அருகே வந்த கோலவடிவு, அங்கு மிங்குமாகப் பார்த்தாள். அலங்காரி அத்தை வீடு அங்கேதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/126&oldid=1243593" இலிருந்து மீள்விக்கப்பட்டது