பக்கம்:சாமியாடிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

125

சாமியாடிகள் 125

இருக்குது. போய்ப் பார்த்தா என்ன. அஞ்சு வருஷத்துக்கு முன்னால. அத்தை வீட்டுக்குப் போயிருக்கேனே. புதுசாவா போகப் போறேன். அதெப்படி அப்போ நான் வயசுக்கு வரல. அத்தை வீட்டுக்கு வயசுப் பொண்ணுவ போனால்தானே, ஊருக்கு சந்தேகம் வரும். சந்தேகம். பொல்லாத சந்தேகம். தாயக் கழிச்சாலும், தண்ணியக் கழிக்கப்படாதாம். அதாவது தண்ணி வராத ஏதோ ஒரு இடமோ, அந்த தண்ணியோ அசிங்கமாய் இருக்குன்னு அதுக்கு அடுத்த இடத்தையோ, தண்ணியையோ கழிக்கப்படாது. அப்படியே. அந்த தண்ணியக் கழிச்சாலும் இந்த அத்தையைக் கழிக்கப்படாது. அவளுக்கு ஆயிரம் வில்லங்கம் இருக்கும். ஆனால் அந்த அத்தைதான் என்னைக் காப்பாத்துவாள். படிதாண்டா பத்தினிமாரு. அக்னி ராசாவுக்கு என்ன முடிக்கணுமுன்னுதான் பேசுவாளுவ. ஒரு பொண்ணு தன்னோட கல்யாணத்தைப் பத்தி பேசுறதான்னு சிரிப்பாளுவ.

கோலவடிவு அங்குமிங்குமாய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு, அலங்காரி வீட்டின் வெளிச்சுவரில் குப்புறச் சாய்ந்து நின்றபடி, முகத்தை மறைத்துக் கொண்டு கதவைத் தட்டினாள். அதிக நேரம் தட்ட வேண்டிய அவசியமில்லை. அலங்காரியின் பாவி மனுஷன் கதவைத் திறந்துவிட்டு, ஆச்சரியப்பட்டார். பிறகு இங்கே பாரேன் என்பது மாதிரி, பெரிய வீட்டுத் திண்ணையில ஒரு சேலையைத் தைத்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தார். உள்ளே ஓடிவந்த கோலவடிவு, காஞ்சான், எலி டாக்டர் காட்டும் அவசரத்தைவிட அதிக அவசரம் காட்டித் கதவைத் தாழிட்டாள்.

அலங்காரி ஊசி நூலோடு எழுந்தாள். சேலை ஒரு பொருட்டல்ல என்பதுபோல் அதை விசிறியடித்துவிட்டு, பாதி வழி நடந்து, கோலவடிவை, தனது மறுபாதி போலாக்கி, அனைத்துக் கொண்டே பேசினாள்.

"என்னடா. இப்டி தும்மல் வருதேன்னு நெனச்சேன். நமக்கு பிடிச்சவங்க வருவாங்கன்னு எதிர் பார்த்தேன். நீ வந்துட்டே ஆயுக

நூறு. இந்த வீட்டுக்கு அஞ்சு வருஷத்துக்கு முன்னாலதான் வந்திருக்கே. இல்லியா..?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/127&oldid=1243594" இலிருந்து மீள்விக்கப்பட்டது