பக்கம்:சாமியாடிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

சு. சமுத்திரம்

126 சு. சமுத்திரம்

கோலவடிவு பதில் சொல்லப்போனாள். அலங்காரி மகள் விமலா கல்லூரி படித்து முடித்துவிட்டு, விடுமுறையில் வரும் போதெல்லாம் இவள் வந்திருக்கிறாள். அந்த அண்ணிய இவளுக்கு ரொம்ப பிடிக்கும். விமலாண்ணி மதுரையில் கல்யாணம் ஆனபிறகு அம்மாவ எட்டிப் பாக்கதே கிடையாது. பக்கத்து ஊருக்கு புருஷனோட வாராள். இந்தப் பக்கம் வர்ரதே இல்ல. அம்மா நடத்தை சரியில்லன்னு இப்பதான் அம்மாளுக்கு தெரியும் போலுக்கு. அவள ஞாபகப்படுத்தி இவள அழ. வக்கப்படாது."

அலங்காரி மெளனமாக நின்ற கோலவடிவை தோளில் கை போட்டு, திண்ணையை அடுத்த அறைக்குக் கூட்டிப் போனாள். பிறகு கணவனுக்கு ஆணையிட்டாள்.

"என் மருமவளுக்குக் போண்டா வாங்கிட்டு வாரும். இல்லாட்டா மசால்வடை ஒன்னத்தான் கேனய்யா. ஏன் இப்படி பராக்கு பாக்கே. எனக்குன்னு வந்தே பாரு. சரியான அக்னி ராசா. பீரோவுல காசு இருக்கு. எடுத்துட்டு ஒடுய்யா."

"எனக்கு எதுவும் வேண்டாத்தே. சாப்புடுற நிலையிலயும், நான் இல்லத்தே."

கோலவடிவு, அலங்காரியின் மார்பில் விழுந்தாள். அவளின் இரு தோள்களையும் பிடித்துக் கொண்டு அங்குமிங்குமாகத் தலையாட்டினாள். விம்மியடிபயே பேசினாள்.

"அத்தே நீங்க சொன்னது சரியாப் போச்சு. அத்தே. என்னை அக்னி ராசாவுக்கு எரிச்டுவாவ போலுக்கு. ஆமாத்தே. அக்னி ராசாவுக்கு அநேகமா என்னை முடிச்சுடுவாவ போலுக்கே. நீங்கதான் என்னக் காப்பாத்தணும்.”

"அய்யோ. எனக்கு கையும் ஒடமாட்டக்கு. காலும் ஒடமாட்டக்கே. ஒன்னையா. அக்கினி ராசாவுக்கா. அடக் கடவுளே. யோவ் ஒம்மத்தான். துளசிங்கத்தை நான் சொன்னேன்னு கையோட கூட்டி வாரும். இங்க வாருமுய்யா. சொல்லப் பொறுக்காம ஒடுவியரே. எது கேட்டாலும் முழுசாக் கேக்கணும். துளசிங்கத்தைத் தனியாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/128&oldid=1243595" இலிருந்து மீள்விக்கப்பட்டது