பக்கம்:சாமியாடிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

127

சாமியாடிகள் 127

கூப்பிட்டு, நான் உடனே வரச் சொன்னேன்னு சொல்லும். கோலவடிவு இருக்கான்னு சொல்லாதயும். சொல்லிட்டா வெட்கப்பட்டுட்டு வரமாட்டான். இந்தாரும் ஐம்பது பைசா. ஒரு டியும், மசால்வடையும் சாப்புட்டுட்டு அப்பிடியே ஆட்டுக்கு புல்லு வெட்டிட்டு வாரும்."

அலங்காரி, கணவனை வாசலில் வழியனுப்பி வைத்த கையோடு கதவைத் தாழ்ப்பாளிட்டு விட்டு அந்த இடைவெளி நேரத்தில் கோலவடிவின் பிரிவை பொறுக்க முடியாதவள் போல் ஓடிவந்தாள். கோலவடிவு மருவி மருவிக் கேட்டாள்.

"அவரு. அவரு. எதுக்கத்தே." "நானும் யோசிச்சேன். ஆனால் அவனாலதான் யோசனையே சொல்ல முடியும். பாரு ஒன் நிலமயப் பார்த்து, இந்த அத்தைக்கே கைகால் ஆடுதுபாரு. ஒன்னை காப்பாத்தியாகணும். இதுல அத்த பிறழப் போறதுல்ல. ஆனால் எப்டிக் காப்பாத்தறது. இதுக்கு துளசிங்கம்தான் சரியா யோசித்து சொல்லுவான். சரி. என்ன நடந்தது. ஏது நடந்ததுன்னு இந்த அத்த கிட்ட ஒருவரி விடாம ஒப்பிப்பியாம். நான் இருக்கேன் சொல்லுடி என் ராசாத்தி."

கோலவடிவு, வயலில் துளசிங்கம் குங்குமம் வைத்த அந்த நாளில் இருந்து, அந்த பம்ப் செட்டில் குளித்தாலும், குங்குமம் வைக்கப்படாத இந்த நாள்வரை வரிவரியாய் வார்த்தை வார்த்தையாய் ஒலி ஒலியாய் ஒப்பித்தாள். சொல்லி முடித்துவிட்டு, மாங்கு மாங்கு என்று அழுதாள். அழுது முடித்துவிட்டு, அத்தையை சோகமாகப் பார்த்தபோது-தெருக்கதவு தட்டப்பட்டது. அதைத் திறப்பதற்காக துள்ளிக் குதித்தவளை, அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு, அலங்காரி வெளியே வந்தாள். கதவைத் திறந்ததும், துளசிங்கம் வாசற்படியில் நின்றபடியே என்ன சித்தி என்றான். உள்ளே. வாப்பா. என்று அவன் கரத்தைப் பிடித்து உள்ளே இழுத்துவிட்டு, அலங்காரி கதவை மீண்டும் தாளிட்டாள். அவன், கதவை ஒரு கையால் திறக்க முயற்சி செய்தபடியே கேட்டான்.

"ஒனக்கு ஏன் சித்தி காலம் நேரம் தெரியல. இன்னிக்கு நம்ம சுடலை மாடனுக்கு வரிபோட நம்ம சொக்காரங்க கூடியிருக்காங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/129&oldid=1243596" இலிருந்து மீள்விக்கப்பட்டது