பக்கம்:சாமியாடிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

சு. சமுத்திரம்

128 சு. சமுத்திரம்

கரும்பட்டையான் குடும்பத்து காளியம்மன் கொடையோடயே நம்ம கோவிலுக்கும் கொடைன்னு நானே முடிவு எடுத்தாச்சு. ஆனாலும் கூட்டத்துல முடிவு எடுக்கதா பாவலா செய்யனும். எவனும் கரும்பட்டையானுவளுக்குப் பயந்து முடிவ மாற்றிடப்படாது பாரு."

"அப்படி மாத்திட்டால் நாம உயிரோட இருக்கதுல அர்த்தமில்ல. உள்ள யாரு இருக்கான்னு பாரு..."

"அடடே. கோலவடிவு. இவள் எதுக்கு வந்தாள்..?"

"காரணமாத்தான் வந்திருக்காள். அக்கினி ராசாவுக்கு அவளக் கட்டப் போறாங்களாம். அவளுக்கு இஷ்டமில்ல. நாம் அந்தக் கல்யாணத்தை தடுக்கணுமாம்."

"இருக்கிற உபத்திரம் போதாதுன்னு இவள் வேறயா..? அதோட இவளும் லேசுபட்டவ இல்ல. அன்னைக்கு- திருமலைக்கு ரகசியமாய் கையோட கையாய் பணத்தை எடுத்து."

"பழைய கதை வேண்டாண்டா. சித்தி சொன்னால், அதுல காரண காரியம் ஏதாவது இருக்கும். ஆறுதலா அவள் கிட்ட ரெண்டு வார்த்த பேசிட்டு போ.”

"என்ன சித்தி இது. அவள்கிட்ட என்ன பேச்சு. அதுவும் ஒன் வீட்ல. கதவ மூடிக்கிட்டு. இதுல்லாம் கொலையில போய் முடியுற சமாச்சாரம்."

"இப்போ நீ அவள்கிட்ட பேசுனால் கோயில் விவகாரத்துல நாம் ஜெயிப்போம். எப்படின்னு கேளாத பேசாம அவள் கிட்ட பேகடா. ஆறுதலா பேக. விளையாட்டா..."

"போ சித்தி." "நீ அவள்கிட்ட பேசும்போது சித்தி போயிடுவேன்."

அலங்காரி கண்சிமிட்டியபடியே சிரித்தாள். துளசிங்கத்திற்கும் கிறக்கம் வந்தது. இருவரும் கோலவடிவைப் பார்த்தபடியே போனார்கள். உள்ளறையில் கட்டிலில் உட்கார்ந்திருந்த கோலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/130&oldid=1243597" இலிருந்து மீள்விக்கப்பட்டது