பக்கம்:சாமியாடிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

சு. சமுத்திரம்

12 சு. சமுத்திரம்

"அப்போ நான் கண்டவனை எல்லாம் வீட்டுக்குள்ள விட்டு கதவை அடைக்கேன்னு சொல்றீயா?"

"குத்தமுள்ள மனசு குறுகுறுக்குமாம்." "அப்போ ஒங்க வம்சம் ரொம்ப யோக்கியமுன்னு நெனப்போ?”

"நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் எங்க கரும்பட்டையான் குடும்பம் கவுரிமானுக மாதிரிதான். எங்க குடும்பத்துல எவளாவது ஒருத்தி எவன் கூடயாவது ஒடிப்போயிருக்காளான்னு ஒரு விரல மடக்கு பார்க்கலாம்."

"எந்த சோளத்தட்டைக்குள்ள என்ன நடக்குதோ? எந்தக் கரும்புத் தோட்டத்துக்குள்ள என்ன குறும்பு நடக்குதோ..?"

"ஒவ்வொரு சோளத் தட்டையா விலக்கிப் பாரு. ஒவ்வொரு கரும்பா பிரிச்சுப் பாரு... எங்க கரும்பட்டையான் குடும்பத்துப் பெண்ணுல ஒருத்தியக் கூட கையுங் களவுமா பிடிக்க முடியாது. ஒவ்வொருத்தியள போல பட்டப்பகலுல பப்ளிக்கா ஒருத்தனோட சைக்கிள்ல உட்காந்து வரல. அப்புறம் சைக்கிள்காரன ஒப்புக்கு வச்சுட்டு இன்னொருத்தன் பைக்ல ஏறல."

அலங்காரி நிலைகுலைந்தவள்போல், ஆல விழுதைப் பிடித்துக் கொண்டாள். அங்கிருந்த பெண்களும் சந்திராவை அதட்டவில்லை. என்றாலும், இந்த அலங்காரி வாழ்க்கைப்பட்ட செம்பட்டையான் குடும்பத்துப் பெண்களுக்கு அலங்காரியின் சங்கதி தெரிந்தும், லேசாய் கோபம் வந்தது. அதேசமயம் அவளுக்கு வக்காலத்து வாங்குவது தாங்களும் அவளைப்போல் ஆகத்தயார் என்று அறிவிப்பதுபோல் ஆகிவிடும் என்று கம்மா இருந்தார்கள். ஒருவேளை இதற்குமேல் சந்திரா பேசியிருந்தால், ஏதாவது சொல்லி இருப்பார்கள். சந்திரா வாயைப் பூட்டிக்கொண்டாள். அந்தப் பெண்களுக்கு இடையே இப்போது மெளனம் கொடுங்கோல் புரிந்தது.

அலங்காரிக்கு வழக்கம்போல் தொண்டை கணத்தது. அதற்குள் முள் போன்ற ஏதோ ஒன்று, மேலும் கீழுமாய் முகமெங்கும் பாய்ந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/14&oldid=1243287" இலிருந்து மீள்விக்கப்பட்டது