பக்கம்:சாமியாடிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

13

சாமியாடிகள் 13

இறுதியில் முன் நெற்றியைக் குத்தியது. முகமெங்கும் இருட்டு மொய்த்தது. சாதாரண ஒரு சிரிப்பைக்கூட தற்செயலாய் பார்ப்பதையே, கண்டனக் கணையாகக் காண்பவள். சண்டை சச்சரவு வரும்போது, சில பெண் கள் ஒன் பவு சு. தெரியா தா என்று இறுதி ஆயுதத்தைப் பயன்படுத்திப் பேசுகிறபோது, வாயை நிராயுதபாணியாக்கி கேட்டு, தலையில் மாறி மாறி அடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஒடி, புருஷனைத் திட்டுபவள். இப்போது, ஒடி ஒளிய இடமில்லாமல் தவித்தாள். அந்தத் தவிப்பில் தனக்குத்தானே பேசிக் கொண்டாள். அது ஒரு சபதமாகும் என்று நினைக்காமல்தான், தனக்குத்தானே சூளுரைத்தாள். அலங்காரி தனக்குத்தானே தனக்குள்ளேயே பேசிக் கொண்டாள்.

"நான் மட்டும் ஓடிவந்ததாலேதானே இந்த ஏச்சுப் பேச்சு? நான் ஒடி வந்த பெறகு பிறந்த இந்தச் சந்திரா பயமவள் எப்படிப் பேசுறாள்? இவங்க குடும்பத்திலயும் ஒருத்திய நான் ஒட வச்சா இப்படிப் பேசுவாளா..? வச்சா என்ன வச்சா? ஒட வச்சே காட்டணும். கரும் பட்டையான் குடும்பத்த கரும்புள்ளி செம்புள்ளி குத்துறது மாதிரி செய்து காட்டணும்." -

அலங்காளி அங்குமிங்குமாய் திரும்பினாள். மேற்குப் பக்கத்திலிருந்து செம்பட்டையான் குடும்பத்தைச் சேர்ந்த துளசிங்கம் கையில் ஒரு கம்போடு வந்தான். கிழக்குப் பக்கத்திலிருந்து கரும்பட்டையான் குடும்பத்தைச் சேர்ந்த கோலவடிவு கையில் ஒரு கூடையோடு வந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/15&oldid=1243288" இலிருந்து மீள்விக்கப்பட்டது