பக்கம்:சாமியாடிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

சு. சமுத்திரம்

#42 சு. சமுத்திரம்

விட்டுக் கொடுக்கோம். ஆனால் கரும்பட்டையான் கூட்டத்துக்கு எந்த வருஷம் விட்டுக் கொடுத்தாலும் இந்த வருஷம் விட்டுக் கொடுக்கப் போறது இல்ல. இப்பவே சொல்லு. ஒங்க குடும்பத்துல ராமய்யா தம்பிதான் பெரியவன்னாலும், நீதான் தலை. சொல்லு."

எலிடாக்டர் போட்ட கொக்கிப் பிடியில் மாட்டியபடி, பற்குணமும், பீடி ஏசெண்டும், உடம்பை நெளித்தார்கள். ஐம்பது வயதுக்கார பற்குணத்தின் வைரப்பட்ட கருப்புடம்பு களிமண்போல் குழைந்தது. எலி டாக்டரின் இந்த யோசனைக்குக் காத்துக் கருப்பன்களில் பலர் ஒத்துப் பாடினார்கள்.

"ஆமாண்ணாச்சி. ஆமா. தம்பி. ஊரிலயே பெரிய குடும்பம் நம்ம குடும்பம். நாமளே முதல் வெள்ளில கொடை கொடுப்போம்."

பற்குணம் அரசியலில் கொஞ்சம் அனுபவப்பட்டவர். அதனால், உடம்பைக் குழைத்தும், குரலை உயர்த்தியும் பேசினார்.

"மூள இருக்காடா. பொதுக்கூட்டத்துல கடைசில பேசுறவரு யாரு. தலைவர் தானே. இது மாதிரி. கடைசி வெள்ளில கொடை கொடுக்கதுதான் நம்ம குடும்பத்து பெரும. சரிவே. எலிமச்சான். என்ன சொல்லுதியரு.”

"ஒங்களுக்கு எப்டி கடைசி வெள்ளி முக்கியமோ. அப்டி எங்களுக்கு முதல் வெள்ளி, இதுல பேசுறதுக்கு ஒண்ணுமே இல்ல."

"ஊர் வழக்கத்தை மாத்தப்படாது. இதனால ஊரே குட்டப் புழுதியாய் ஆயிடும் ஒங்களால. அம்மன் கொடையை அடுத்த வெள்ளிக்கு தள்ளிப் போட முடியுமா. முடியாதா. கடைசியாய் கேட்கேன்."

"கடைசியாய் கேட்டாலும் சரி. மொதல்ல கேட்டாலும் சரி. வச்சது வச்சதுதான். இதுல பேச்சுக்கே இடமில்ல. மாப்பிள்ள."

"அப்போ இந்தக் காத்துக் கருப்பன் குடும்பத்துக்காரங்க சொல்லுறத கேட்க மாட்டிய. அப்படித்தானே மச்சான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/144&oldid=1243657" இலிருந்து மீள்விக்கப்பட்டது