பக்கம்:சாமியாடிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

143

சாமியாடிகள் 143

"நீ அப்டி எடுத்துக்கிட்டால் நாங்க எப்டி பதில் சொல்லுறது மாப்பிள்ள..? ஆனால் எங்க மாடனுக்கு அடுத்த வெள்ளில கொடை நடந்தே தீரும்."

"அதை நடத்த விடாமல் செய்ய எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகுமுன்னு நினைக்கிய."

அலங்காரி ஒதுக்குப்புறமாய் நின்ற பெண்கள் கூட்டத்தில் இருந்து ஒடோடி வந்தாள்.

"நீ பேசுறதுல ஒரு வகையும் இல்லல. தொகையும் இல்ல. எங்க சுடலை மாடனுக்கு நடத்துற விசேஷத்த யாராவது தடுத்தால். அவங்கள எங்க மாடனே கேட்பான். சொம்மா பழனிச்சாமி அண்ணாச்சி வீட்டுக்கும் ஒங்க வீட்டுக்கும் கொடுக்கல் வாங்கல் பேச்சு நடக்குதுன்னு தாம் தூமுன்னு குதிக்கப்படாது.”

"எங்க குடும்பத்துல பொம்புளைவ இப்டி அம்பலத்துல வந்து பேசுற பழக்கம் இல்ல. அப்டிப் பேசுனா. ஒரே வெட்டா வெட்டிப் பிடுவோம். வருஷக்கணக்குல. இப்பிடி. விட்டு வைக்கமாட்டோம்."

"எங்க கரும்பட்டையான் குடும்பத்துலயும் அப்படித்தான். எங்க பொம்புளைக எவளும் எங்கள மீறிப் போக மாட்டாளுவ... எங்க பொம்புளயால. எங்க தல, எப்பவும் குனிஞ்சது கிடையாது."

கடைசியாகப் பேசிய திருமலையை உற்றுப் பார்த்தபடியே, துளசிங்கம் ஒகோ அப்படியா...' என்று சொல்லி ஏளனமாய்ச் சிரித்தான்.

பற்குணம் எழுந்தபடியே கர்ஜித்தார்.

"எந்தப் பொம்புளயப் பத்தியும். எந்தப் பயலும் பேசப்படாது. ஆனால் ஒண்ணு. செம்பட்டையான் கூட்டம் சுடலமாடனுக்கு இரண்டாவது வெள்ளியிலயோ. மூன்றாவது வெள்ளியிலயோதான்.

கொடை கொடுக்கணும். இதையும் மீறி கொடுத்தால் சுடலைமாடன் ஆடமாட்டான். ஊருதான் சுடலையாவும்."

"நீரு இப்டி மிரட்டுறது நல்லதாப் படல."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/145&oldid=1243658" இலிருந்து மீள்விக்கப்பட்டது