பக்கம்:சாமியாடிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

147

சாமியாடிகள் 147

"சரி, ரெண்டு கோயிலுக்கும் நடக்கட்டும்.”

"அவங்க சுடலைக்கு எப்படி.."

"இப்போ அவங்க பேச்சு தேவையில்ல. நாம நம்ம அம்மனுக்கு அடுத்த வெள்ளில கொடை கொடுக்கோம். அவ்வளவுதான். அதுதான் பேச்சு..."

"எப்பா. இப்பதான் மனசு குளுந்தது. அண்ணாச்சின்னா

அண்ணாச்சிதான்."

t

திருமலைக்கு ஒரு வயது குறைந்த ராமசுப்பு பக்குவமாய் பேசினான்.

"நம்ம கோவிலுக்கும் அவங்க கோவிலுக்கும் இடையே இருக்கிற தூரம் கூப்புடு தூரம். இங்க இருந்து அங்க பாக்கலாம். அங்க இருந்து இங்க பாக்கலாம்."

"இதுக்குத்தான் ஊரில ஒன்ன தோல்வாயன்னு சொல்லுதாங்க. சட்டுப்புட்டுனுன்னு சொல்லேண்டா..."

"நான் பெரியப்பா கிட்டதான் பேசுறேன். ஒம்மகிட்ட இல்ல. கோவிலுக்கு களையே கூட்டந்தான். அந்தக் கோவிலுல. இருபத்திரண்டு பேர் சாமியாடுறான் நம்ம கோவிலுக்கு ஒரே ஒரு சாமியாடி. அதுவும் நெத்தில திருநீர் பூசுறேன்னு நம்ம வாய்க் குள்ளேயே கைய விடுற சின்னச்சாமித் தாத்தா. இவரு ஆடுறதவிட இவரு கைகாலு ஆடுறதுதான் ஜாஸ்தி."

"சின்னப்பய மவனுக்கு பேச்ச பாரு. இப்ப என்னல செய்யனும். வேணுமுன்னா நீ சாமியாடு. நான் ஒதுங்கிக்கிறேன். பாருடா பழனிச்சாமி.”

"அப்போ. சாமி ஆடுறதும். ஆடாததும் மனுஷன் இஷ்டத்த பொறுத்தது. அம்மன் இஷ்டத்த பொறுத்தது இல்லங்கிறியளா”

"ஏல நாட்டு வக்கீலு நாராயணா. குதர்க்கமாய் பேசாம. இந்தச் சிக்கலுக்கு ஒரு வழி சொல்லேண்டா..."

"சொல்ல மாட்டேன். செய்து காட்டுவேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/149&oldid=1243664" இலிருந்து மீள்விக்கப்பட்டது