பக்கம்:சாமியாடிகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

சு. சமுத்திரம்

148 சு. சமுத்திரம்

"அவங்க வீடியோ படத்துக்கு அதிகமாய் ஒண்னு செய்யணும். செய்யப் போறேன்."

"என்ன செய்யப் போறே."

"இப்ப சொல்ல மாட்டேன். ஆனால் செய்வேன்."

"செறுக்கி மவனுக்கு திமுரப் பாரு. நம்ம மனச அந்தரத்துல விடுறான் பாரு. பொம்புள நாடகமாடா..?"

"இல்ல."

"ரிக்காட் டான்ஸ்ா..?"

"இல்லவே இல்ல."

"பிறகு என்னதான் செய்யப்போற."

"வேணுமுன்னா. பெரியப்பாகிட்ட தனியா சொல்லுறேன். அவருக்கு சம்மதமுன்னா அந்தக் காரியத்த செய்து செம்பட்டையான் கோவிலுல சாமியாடுற பயலுவகூட நம்ம கோவிலுக்கு வரும்படியாய் செய்யப் போறேன். பெரிசா."

"ஏல நாட்டு வக்கீலு. நீ செம்பட்டையானுவளவிட திமுருபிடிச்ச பயல். என்னதான்னு சொல்லேண்டா..."

"நீரு ஆயிரம் கேள்வி கேட்டாலும் இப்ப சொல்லமாட்டேன். ஆனால் ஒண்ணு. செம்பட்டையான் கோவிலுல காக்கா குருவிசுடட இருக்காது. பெரியப்பா மட்டும் கொஞ்சம் கண்ணை மூடிக்கணும்."

பழனிச்சாமி, நாட்டு வக்கீலை எடைபோட்டுப் பார்ப்பதுபோல் பார்த்தார். கட்டில் சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு புராணப் புத்தகத்தை பிரித்தார். பிறகு பெருமூச்சோடு பேசினார்.

"எப்டி வேணுமுன்னாலும் செய்யுங்க.. ஆனால் ரெண்டு கண்டிஷன். என்னை கோயிலுக்கு வான்னு வற்புறுத்தப்படாது. செம்பட்டையானை கண்டால் ஒதுங்கிப் போகணும். வம்பு தும்பு வச்சுக்கப்படாது."

எல்லோரும் ஒருமித்துப் பேசப் போனார்கள். அதற்குள் காபி டம்ளர்கள் ஆவி பறக்க வந்துவிட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/150&oldid=1243666" இலிருந்து மீள்விக்கப்பட்டது