பக்கம்:சாமியாடிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

சு. சமுத்திரம்

1SO சு. சமுத்திரம்

மாலை வேளை என்பதால், கண்ணுக்குச் சிலரே தென்பட்டார்கள். அதுவும் தொலைவில், அவள் அந்தப் பள்ளமான பருத்திக் காட்டிற்குக் குறுக்கு வழியாய் வரவும், துளசிங்கமும், நேர் வழியாய் வரவும் சரியாய் இருந்தது. கோலவடிவைப் பார்த்து, துளசிங்கம் சிரித்தான். அந்தச் சிரிப்பில் பாதிக்கோபம் பறந்து போவதை உணர்ந்த கோலவடிவு, எஞ்சிய கோபத்தை விடப் போவதில்லை என்பதுபோல் தம் பிடித்து நின்றாள். துளசிங்கம், அவள் அருகே வந்தபோது அவள், அவன் கை எட்டாத தொலைவில் நின்று கொண்டாள். மனதிற்குள் பேசியதை ஒப்பித்தாள்.

"நான் ஒன்னும் ஒம்மகிட்ட கொஞ்ச வரல. நம்மளுக்குள்ள நடந்ததை சொல்லப் படாதுன்னுதான் சொல்ல வந்தேன்."

"எங்க சுடலை மாடன் சத்தியமாய்ச் சொல்லுதேன். என் தலையே போனாலும் நமக்குள்ள நடந்ததை சொல்லவே மாட்டேன். அதோட ரெண்டு சமயத்துலயும் தப்பு செய்தது நான்தான். நீயில்ல."

"அப்போ எங்கப்பாவ. சபையில. பேர் சொல்லி. மொட்டய்யா."

"நானும் ஒண்ணன்மாதிரி ஒரு முட்டாளு. எப்டிச் சொன்னேன்னு எனக்கே தெரியல. எங்கப்பா முன்னால சிகரெட்ட பிடிக்கிற நான், மாமா முன்னால. பிடிச்சதுல்ல. இன்னும் ஆயிரம் சண்டை வந்தாலும், ஒரு சிகரெட்டக்கூட பிடிக்க மாட்டேன்."

"அது அவரோர் இஷ்டம். அனாவசியமாய் சபையில என்னையும் அக்கினி ராசாவையும் அலங்காரி அத்தை எதுக்கு சம்பந்தப்படுத்தணும்."

"சரியான பைத்தியக்காளி நீ சித்தி அப்படிச் சொன்னதாலதான், இனிமேல் பொண்ணு கேட்க அவங்க யோசிப்பாங்க. இல்லாட்டா சித்தி சொன்னதை நீரூபிக்கதாய் ஆயிடும். பாரு. எங்க சித்தி லேகப்பட்ட சித்தியில்ல."

"என் நெத்தில குங்குமம் வச்ச நெனப்பிருந்தால், அது தந்த

ஞாபகம் இருந்தால், நீரு விட்டுக் கொடுக்கலாமுல்லா. ஒரு வெள்ளிக்குப் பதிலா. இன்னொரு வெள்ளில வைக்கலாமுல்லா.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/152&oldid=1243668" இலிருந்து மீள்விக்கப்பட்டது