பக்கம்:சாமியாடிகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

சு. சமுத்திரம்

152 சு. சமுத்திரம்

"சரி. பழையத விடு. ஒன்னப் பார்த்தால் எனக்குத்தான் தப்பு செய்யப்படாதுன்னு ஒரு எண்ணம். அப்படிப்பட்ட முகராசி ஒனக்கு."

"இனுமே நாம சந்திக்கப்படாது. வழில பாத்தாலும் பேசப்படாது. கிட்டாதாயின் வெட்டென மறன்னு பள்ளிக்கூடத்துல படிச்ச பாடம்."

கோலவடிவு திக்கினாள். விக்கினாள். முந்தானையை எடுத்துக் கண்களை ஒற்றிக் கொண்டாள். பிறகு சத்தம் வராமல் இருக்க வாயில் ஒற்றிக் கொண்டாள். துளசிங்கம், அவள் தோளில் கை போட்டான். இரண்டு கைகளாலும் அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபோது, அவள் அவன் மார்பில் முகம் போட்டாள். கழுத்தில் தை போட்டாள். பிறகு அவனிடமிருந்து விடுபட்டு, அவனை ஏறிட்டுப் பார்த்தவள், இன்னொருத்தியைப் பார்த்துவிட்டாள்.

"அய்யய்யோ. ரஞ்சிதம். ரஞ்சிதம்.”

கோலவடிவு, தன் மார்பில் சாய்ந்ததை, திருமலை தன் காலில் விழுந்ததாகப் பாவித்துக் கொண்ட துளசிங்கம் சந்தோஷமாகச் சொன்னான்.

"அவள் பாக்கல. வேற பக்கமா நிக்காள்."

"அய்யோ.. நம்மள பாத்துட்டுதான் அப்படி திரும்பி நிக்காள். அதோ வாராள் பாருங்க. எம்மோ. அவள் ஊர்ல சொன்னா எனக்கு மட்டுமில்ல. எங்க குடும்பத்துக்கே கேவலமாச்சே."

கோலவடிவு பயந்தபடியே ஒடினாள். துளசிங்கம் சிரித்தபடியே நின்றான். அலங்காரி சித்தி சொன்னபடியே உயிருக்கு உயிராய் பேசியாச்சு. அவள்கிட்டபோய் சொல்லணும். சிரிப்பாள். சிரிப்பாள். அப்படிச் சிரிப்பாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/154&oldid=1243671" இலிருந்து மீள்விக்கப்பட்டது