பக்கம்:சாமியாடிகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

சு. சமுத்திரம்

154 சு. சமுத்திரம்

"கொஞ்சம் தள்ளி உட்காருங்க... இன்னும் தள்ளி. தள்ளி..."

"இப்பபடியே தள்ளித் தள்ளிப் போனால். சுடலை மாடன் இருக்காரே, அந்த கோவிலுல போய்தான் இடிப்போம்."

'நாட்டு வக்கீல் நாராயணன் குறுக்கு விசாரணைக்கு போய் விட்டான்.

"அம்மனுக்கு நாளைக்குப் பந்தக்கால் நடுறோம். அப்புறம் கண் திறப்போம். எவளாவது சுத்தபத்தம் இல்லாதவள் இருந்தால், இப்பவே எழுந்து போயிடணும்."

சில பெண்கள் சிரித்துக் கொண்டார்கள். சிலர் முகத்தைச் சுழித்துக் கொண்டார்கள். பலர், ஆங்காங்கே கூடிக்கூடி நின்ற வண்ணம் இரண்டு கோயில்களையும் கண்ணால் அளந்தபடியே வாயளந்த ஆட்களை வாயகலப் பார்த்தார்கள்.

செம்பட்டையான் ரோசாப்பூ சிரிக்கவில்லை. சுழிக்கவில்லை. சினந்தபடியே பேசினாள்.

"இந்த நாட்டு வக்கீல் நாராயணன் நம்ம எல்லோரையும் தன் பொண்டாட்டி மாதிரி சுத்தபத்தம் இல்லாதவள்னு நெனச்சிட்டான் பாரேன்."

"எங்க அண்ணாச்சி. பெண்டாட்டி எந்த வகையிலழா. சுத்த பத்தமில்ல.? அம்மனுக்கு சுத்தம் இல்லாட்டா கோபம் வருமுன்னு உலக நடப்பச் சொன்னா ஒனக்கு ஏன் வலிக்குது. ஒங்க சுடல மாதிரி எங்கம்மன் புண்ணாக்கு தின்கிறவள் இல்ல."

கரும்பட்டையான் வாடாப்பூ, ரோசாப்பூவைத் திட்ட, காத்துக் கருப்பி தங்கம்மா தனது கருத்தைப் பொதுக் கருத்தாகச் சொன்னாள்.

"செம்பட்டையான் கூட்ட ஆம்புளைகளுக்குத்தான் திமிருன்னு பார்த்தோம். பொம்புளைகளுக்கும் அப்பிடித்தான் போலுக்கு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/156&oldid=1243673" இலிருந்து மீள்விக்கப்பட்டது