பக்கம்:சாமியாடிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

சு. சமுத்திரம்

158 க. சமுத்திரம்

காத்துக் கருப்பன்களும், கரும்பட்டையான் பெண்களும், கைவிரல்களைக் கடித்தபடியே யோசித்தார்கள். எம்மாடி வயல் வேல பாக்கதைவிட தூக்குப் போட்டுச் சாகலாம். பீடி சுத்துனாதான் கையில ரெண்டு காசு புரளுது. வீட்லயும் மதிக்காக. வயலுக்கு போனால் வரப்பு மாதிரி மிதிப்பாவ... இந்த அம்மன்கொடை முடியுறது வரைக்குந்தான் செம்பட்டையான் பொண்ணுவளத் தடுப்பான். அப்புறம் ஆறுனசோறு பழைய சோறு மாதிரிதான்.

செம்பட்டையான் பெண்களும், இதர பெண்களைப் போல், சும்மா ஒரு பேச்சுக்காக அப்படிப் பேசியிருக்கணும் என்று அனுமானித்து, இலை வாங்க நுழைந்தபோது, ஏசெண்டு அதட்டினான்.

"நீங்களெல்லாம் எதுக்காவ சேல கட்டணும். நல்ல மாட்டுக்கு ஒரு அடி. நல்ல பொண்ணுக்கு ஒரு சொல்லு. மானம் மரியாதி வேண்டாம். எந்த செம்பட்டையாளும் இன்னும், இங்கே நிக்கான்னா அவளுக்கு மானம் ரெண்டாம் பட்சமுன்னு அர்த்தம். காசுன்னு வந்துட்டா என்ன வேணுமுன்னாலும் செய்வாளுவ போலுக்கு."

ரோசாப்பூ, வாடாப்பூவையே பார்த்தபடி செம்பட்டையான் பெண்கள் கண்ணிர் சிந்தினார்கள். கரும்பட்டை வாடாப்பூ, பதிலுக்கு கண்ணிர் சிந்தியபடியே அவளோடு நின்றாள். பிறகு அந்தப் பெண்களோடு வெளியே வந்தாள். இந்தப் பெண்கள் அவளை உள்ளே தள்ளிவிட்டாலும் அவள் அவர்களுடனேயே வெளியே வந்தாள். "ஒண்ணாச் சிரிச்சோமே, அதுபோல் ஒண்ணாவே அழுவோம்." என்று சொன்னபடியே வெளியேறினர்.

செம்பட்டைப் பெண்கள், வாடாப்பூவோடு, கடைக்கு வெளியே வந்து, வீதியில் நின்றார்கள். நடந்ததை நம்ப முடியாமல், மேற்கொண்டும் நடக்க முடியாமல் ஸ்தம்பித்து நின்றார்கள். அப்போது, ரஞ்சிதம் எதிர்ப்பட்டாள். அவளைப் பார்த்ததும், இவள்களில் ஒருத்தி சத்தம் போடாமலே அழுதாள். பிறகு ரஞ்சிதத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒப்பித்தாள்.

"அன்னிக்கு ஒன்னை அடுத்த சாதிப் பொண்ணுன்னு பீடிப் பய அவமானமா திட்டும்போது சும்மா இருந்தோமே, அதுக்கு இப்போ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/160&oldid=1243677" இலிருந்து மீள்விக்கப்பட்டது