பக்கம்:சாமியாடிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

சு. சமுத்திரம்

162 சு. சமுத்திரம்

தட்டிவிட்டாள். இதற்குள் அக்கம் பக்கத்தில் போட்டி கொடைகளைப் பற்றிக் கூடிக் கூடிப் பேசி நின்றவர்கள், அங்கே ஒடி வந்தார்கள். அந்தப் பெண்களைச் சத்தம் போட வந்த எல்லோரும், அவர்களின் ஆவேசத்தைக் கண்டு சற்று பயந்து, அது தணிவது வரைக்கும் காத்திருப்பது போல், அவர்களையே பார்த்தார்கள். ஏசெண்டு, வெலவெலத்துப் போனான். ஒருத்திக்குப் பதில் சொல்லப்போனால், இன்னொருத்தி கேள்வி கேட்டாள். அவன், அந்தப் பக்கம் நின்றவர்களில் பெரும்பான்மையினரான சொக்காரர்களைப் பார்த்து இப்போது முறையிட்டான்.

"இவளுவ பேசுற பேச்சப் பாத்தியளா. பொம்புளன்னு பாக்கேன்." "நாங்களும் ஒங்க ஆட்கள் மொவத்துக்காவ ஒன்ன விட்டுட்டுப் போறோமுல. சாக்கிரத. அடுத்த வாரம் நீயே ஒன்கையால எங்களுக்கு பீடி இலைய கொடுக்கியா. இல்லியான்னு பாரு. பொண்ண மானபங்கப் படுத்துனால், தூக்குத் தண்டனையாம். அடிச்சா ஆயுள் தண்டனையாம். பீடி இலைய மட்டும் பார்க்காம, பேப்பரையும் படிச்சுப் பாரு. வா. ரஞ்சிதம்."

"இவன். எங்க. பீடி இலைய பாக்கான்.? அதைச் சுத்துற விரலத்தான பாக்கான்."

எல்லாப் பெண்களும், ரஞ்சிதத்தை முதுகைப் பிடித்தும், கையைப் பிடித்தும் இழுத்தும் தள்ளிக் கொண்டு போனார்கள். அவள் என்னமோ இந்த ஏசெண்டை திட்டியதுபோலவும், இவள்கள் என்னவோ சமரசம் செய்து வைப்பது போலவும்; இவள்கள் நடக்க, நடக்க, பீடி ஏசெண்ட்டின் பக்கம் நின்றவர்களின் பேச்சு கேட்டது. மூளை இருக்கா. மண்டையில மசாலா இருக்கா..? இதுக்குப் பேருதான் திமிரு. கொளுப்பு. அந்தக் கூட்டம் இவள்களைச் சொன்னதா அல்லது அவனைச் சொன்னதா என்று அந்த களேபரச் சத்தத்தில் சரியாகப் புரியவில்லை.

ரஞ்சிதம் புல்லரித்துப் போனாள். சென்னையில், அண்ணி செண்பகம், வேணுமுன்னா அவன்கிட்ட போய் இருந்துக்க. நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/164&oldid=1243681" இலிருந்து மீள்விக்கப்பட்டது