பக்கம்:சாமியாடிகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

161

சாமியாடிகள் 16]

"என்னடா நெனச்சே. பண்ணிப் பயலே."

"ஒருத்தி இரண்டாவது கணையைத் தொடுத்தாள். இதையடுத்து எல்லாப் பெண்களும் முந்தியடித்து பேசினார்கள்.

"ஒரு பொம்புளய, அதுவும் ஒத்த வீட்டு பொண்ண, அடிக்கவாறியே. நீயுல்லாம் ஆம்புளையாடா..."

"பீடிக் கம்பெனில நீ பெரிய வேலைக்காரன். நாங்க சின்ன வேலைக்காரிவ. எங்கள வராதன்னு நீ எப்டிடா சொல்லலாம்."

"ஊருன்னா ஆயிரம் நடக்கும். ஐயாயிரம் இருக்கும். கரும் பட்டையான் குடும்பத்துல பொண்ணு எடுக்கணுமுன்னா. முறப்படி கேட்கறத விட்டுப்புட்டு, இப்டியாடா ஆடுறது.? ஆம்புளத் திமுர்ல அலையுறவனுவ. சண்டைக்கு நாங்க பொட்டப் பிள்ளியல என்னல செய்வோம்.”

"அம்மன் கொடைக்கும் பீடி சுத்தறதுக்கும் என்னல சம்பந்தம். எரும மாடே."

"ஏமுல. பித்துப் பிடிச்சு நிக்கே ரஞ்சிதத்த தொடுல பாக்கலாம்."

"பெண்கள கொடுமப் படுத்தினா ஆறு வருஷம் செயிலுக்கு போகணுமுன்னு தெரியுமாடா..."

"பீடி சுத்துறத ஒன்னால தற்செயலாய் நிறுத்தலாம். நிரந்தரமா முடியாதுன்னு கண்ணாடிக்காரரை வச்சு ஒனக்கு சொல்லிக் கொடுக்கோம் பார்."

"இந்த ரஞ்சிதம் முகத்த ஏறிட்டு பாருல. அனாதையா, அம்மாவ. இழந்துட்டு இருக்க இவளயால சேலய உறிவே."

"ஏழுழா அவன்கிட்ட பேசிக்கிட்டு. சாணியக் கரைச்சு அவன் தலையில் ஊத்துங்க. அந்த சாணிய எடுழா."

ஒருத்தி ஆவேசப்பட்டு சற்றுத் தொலைவில் கிடந்த எருமைமாட்டுச் சாணியை எடுத்தாள். இன்னொருத்தி, அவளைத் தடுத்து, அவள் கையை அங்குமிங்கும் ஆட்டி, சாணத்தைக் கீழே

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/163&oldid=1243680" இலிருந்து மீள்விக்கப்பட்டது