பக்கம்:சாமியாடிகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

சு. சமுத்திரம்

160 சு. சமுத்திரம்

"கண்ணாடிக்காரர் கிட்டே சொல்லுவோம். அவர் லேபர் கோர்ட்டுல ஏற்பாடு செய்வார். பேரேடு புத்தகத்த பத்திரமா வையுங்க. சரி நாம இப்பவே குட்டாம்பட்டி போய் கூட்டுறவு சங்கத்துல பதிவு செய்யலாம். கோர்ட்ல இல்லன்னா. அரசாங்கத்துல. புகார் கொடுக்கது பத்தி முடிவெடுப்போம். இவனை நீங்க விட்டாலும், நான் விடமாட்டேன்.”

ஏசெண்டு பால்பாண்டி, அந்தப் பெண்களின் பின்பக்கமாக ஒடிவந்து, முன்பக்கமாக நின்று கத்தினான்.

"என்னடி சொன்ன ரஞ்சிதம். என்னை நீ விடமாட்டியா. இப்பவே ஒன் சேலயப் பிடிச்சு இழுக்கேன். ஒன் கள்ளப் புருஷன்ல எந்தப் பய வந்து காப்பாத்துறான்னு பாக்கலாம்."

ரஞ்சிதம் எந்தவித உணர்வையும் காட்டாமல், அப்படியே நின்றாள். அதுமட்டுமில்லாமல், பீடி ஏசெண்டை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். அவன், ஏதோ தன்னிடம் குசலம் விசாரிக்கப் போவது போலவும், அதற்குப் பதிலளிக்க வேண்டியது தனது கடமை என்பது போலவும் சினமடையாமலே அவனைப் பார்த்தாள். "அய்யோ சாமி நான் அப்படி ஒன்னும் பேசல" என்று ரஞ்சிதம் சல்ஜாப்பு சொல்வாள் என்று எதிர்பார்த்த ஏசெண்டு சிறிது அதிர்ச்சியுற்றான். ஆனாலும் செம்பட்டையான் பெண்களைப் பயமுறுத்துவதற்காவது ரஞ்சிதத்தை ஏதாவது செய்ய வேண்டும். ஒப்புக்காவது, அவள் தோளில் கிடக்கும் முந்தானையைக் கீழே இழுத்துப் போடவேண்டும். செறுக்கி மவள்.

ஏசெண்டு, ரஞ்சிதத்தை, அடிமேல் அடிவைத்து நெருங்கினான். என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியாமலே-அதேசமயம், ஏதாவது செய்யவேண்டும் என்ற வீறாப்புடன் நெருங்கினான். இதற்குள் செம்பட்டையான் பெண்கள், ரஞ்சிதத்தைச் சுற்றி வியூகம் போட்டார்கள். அந்த வியூகத்திற்கு முன்னால் கரும்பட்டையான் வாடாப்பூ, தன்னைத்தானே முன்னால் நிறுத்திக் கொண்டு, ஏசெண்டைப் பார்த்துச் சவாலிட்டாள்.

"ஏய். பால்யாண்டி. நீ நெசமாவே. மனுஷன்னா. ரஞ்சிதத்த தொடு பாக்கலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/162&oldid=1243679" இலிருந்து மீள்விக்கப்பட்டது