பக்கம்:சாமியாடிகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

சு. சமுத்திரம்

166 சு. சமுத்திரம்

கிணறு தோண்டுற விவசாய கூலிப் பையன்கள கண்ணு முன்னால பாக்கது மாதிரி இருக்குடா. மெக்கானிக்குகளிடம் திட்டும் உதையும் வாங்கிட்டு, வெறுமையாய் பாக்குற பிஞ்சுப் பயல்க ஞாபகம் வருதுடா.

ரஞ்சிதம், அங்கே வைத்துவிட்டுப் போயிருந்த பூத்தட்டைப் பார்த்தாள். நாளை முதல் இது பீடித்தட்டாகப் போகிறது. அவள் எழுந்தாள். கையில் இருந்த உதிரிப் பூக்களை முருகன் பாதத்தில் போட்டாள். கதம்பப் பூவை மாலை போல் மடித்து, முருகன் சிலையின் கழுத்தில் போட்டாள். அவள் தனக்கென்று ஒரு பூத் துண்டை எடுக்கப் போனாள். நீட்டிய கரத்தைச் சுருட்டிக் கொண்டாள். பெண்களை நகைபோட்டு நகை போட்டே நகைப்புக்கு இடமாக்கிட்டாங்க... பூ வைத்துப் பூ வைத்தே பூவாய் வாட வச்சுட்டாங்க.

ரஞ்சிதம் கோவிலுக்கு வெளியே வந்தாள். மேற்குப் பக்கமாக, ரயில்வே பாலத்தைப் பார்த்தவள், கிழக்குப் பக்கம் உறுமல் சத்தம் கேட்டு, திரும்பினாள். திருமலை, மோட்டார் பைக்கில் கம்பீரமாக வந்து கொண்டிருந்தான்.

ரஞ்சிதத்திற்கு, கோலவடிவை பருத்திக் காட்டில் பார்த்த கோலம் நினைவுக்கு வந்தது. இது வெறும் காதல் பிரச்சினை மட்டுமல்ல. ஊர்ப் பிரச்சினை. துளசிங்கத்திற்கு, ஒருவேளை இந்தக் கோலவடிவு எத்தனையோ பேர்களில் ஒருத்தியோ என்னவோ. அவள் மேல் துளசிங்கத்திற்கு, நிசமாவே காதல் இருந்திருந்தால். நேற்று என்கிட்டே அப்படி வம்பா பேசியிருக்கமாட்டான். தமாஷ்தான். ஆனால் அந்த தமாஷ், நிசமானால் சந்தோஷப்பட்டிருப்பான். அப்படிப் பட்டவனிடம் இருந்து கோலவடிவைக் காப்பாற்றியாகணும். ஒருவேளை. அவளை, அவன் நிசமாவே காதலிச்சால். காதலிக் கட்டும். கல்யாணத்துக்குப் பிறகு காதலிக்கட்டும். விஷயத்தை, இந்த திருமலையிடம் எப்படிச் சொல்வது. எப்படியாவது சொல்லியாகணும். முருகனுக்கு இவரும் பக்தர். முருகன் கோவில் முன்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/168&oldid=1243692" இலிருந்து மீள்விக்கப்பட்டது