பக்கம்:சாமியாடிகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

167


"ஆவேசப்படமாட்டேன். அரிவாளை எடுக்கமாட்டேன்"னு சத்தியம் வாங்கிட்டு, பக்குவமாச் சொல்லணும். ஒரு பொண்ணையும் காப்பாத்தியாகணும். ஊரையும் காப்பாத்தியாகணும்.

ரஞ்சிதம் திருமலையைப் பார்த்து போலிஸ்காரன் கையாட்டுவது போல், வலது கையை நிமிர்த்தி, உள்ளங்கையை வெறுங்கை ஆக்கினாள்.




17

காளியம்மனுக்கு கால் நாட்டு பூஜை - அதாவது பெரிய கோயில்களில் கொடியேற்றுவது மாதிரியான முதல் கட்ட விழா. பழனிச்சாமி, ராமசுப்பு, குள்ளக் கத்தரிக்காய், நாட்டு வக்கீல் போன்ற முக்கியப் பிரமுகர்கள் அம்மனையே பார்த்தபடி நிற்க, கால் நடுவதற்குத் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து சிலர் மண்ணை வெளியில் எடுத்துப் போட்டார்கள். இரும்புக் கம்பியால் குத்தக் குத்த, மண், மண்வெட்டியால் அகற்றப்பட்து. இங்கே என்ன நடக்கிறது என்பதை அங்கே சுடலைமாடன்வாசிகள் முகங்களைச் சுண்டிப் சுண்டிப் பார்த்தார்கள். "சீக்கிரம் சீக்கிரம்” என்றார் குள்ளக் கத்தரிக்காய்.

மாடக்கண்ணு வெட்டிய குழியில், ராமசுப்பு ஒரு பூவரசு மரக்கம்பை நட்டார். சாமியாடி தாத்தா, ஒரு கொப்பு அரச இலைகளிலும் அதன் காம்புகளிலும் சந்தனமிட்டு, குங்குமம் வைத்தார். பின்னர், அதைப் பழனிச்சாமியிடம் நீட்டினார். பழனிச்சாமி, அதைப் பயபக்தியுடன் வாங்கி, அம்மனிடம் அந்தப் பணிவோடு காட்டிவிட்டுப் பூவரசுக் கம்பில் எக்கி நின்று, அந்த அரச இலைகளை கட்டப் போனார். பிறகு, "கம்புக்கும் சந்தனம் வைங்கடா. குங்குமம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/169&oldid=1243718" இலிருந்து மீள்விக்கப்பட்டது