பக்கம்:சாமியாடிகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

சு. சமுத்திரம்

172 சு. சமுத்திரம்

"நல்ல யோசனைதான். படம் பெரிசா தெரிஞ்சா இந்த முட்டாப் பய மவனுவ கூட்டம் சுடலைமாடன் சாமி ஆட்டத்த அந்த கோவிலுல இருந்தபடியே ஒரு கண்ணால பார்த்துக்கிட்டே மறுகண்ணால நம்ம படத்தையும் பார்த்துடப்படாது பாரு.. படம் ரொம்ப பெரிசுன்னா அங்க இருந்தே பாக்கலாம் பாரு..."

"நீயே ஊர்க்காரனுக்கு சொல்லிக் கொடுப்பே போலிருக்கே."

பழனிச்சாமி எதுவும் பேசாமல், அவர்கள் பேசுவதைக் கேட்காதது மாதிரி கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், வெயிலை மறைப்பதுபோல் பிடித்தட்டை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு வாடாப்பூ நடந்தாள். அதைப் பார்த்த பிடி ஏசெண்டு, அவள் அப்பா மாயாண்டியை உசுப்பினார்.

“பாரும் மாமா. ஒங்களுக்காவ நான் செம்பட்டையான் பொண்ணுவள நிறுத்தினேன். கையில காசு நடமாடாட்டால் சுடலை மாடனுக்கு மாலை எடுத்துப் போட முடியாது. ஒரு கோழி வெட்ட முடியாம அவஸ்தப்படட்டுமுன்னு. ஒம்ம மகள் என்னடான்னா, அந்த ரஞ்சிதம் பேச்சக் கேட்டு செம்பட்டையான் பொண்ணுவகூட சேந்துக்கிட்டு முருகன் கோவில் பக்கத்துல குட்டாம்பட்டி பீடிய சுத்துறாள். எனக்கு ஏன் கெட்ட பேரு. இவளே செம்பட்டையான் பொம்புளைகளோட சேர்ந்ததால் நானும் பழையபடி செம்பட்டையான் பொண்ணுவள என் கடைக்குப் கூப்பிடப் போறேன். பாரும் ஒம்ம மகள் எப்படி தரை குலுங்க நடக்கான்னு. அன்னைக்கு என்னடான்னா. அப்படிப் பேசினாள். அதோ பாரும்."

மாயாண்டி பார்த்தார். வேக வேகமாய் நடந்தார். வாடாப்பூவுக்கு பின்னால் போய் அவள் சடையைப் பிடித்து இழுத்தார். மல்லாக்க தன் மார்பில் சாய்ந்தவளைத் தோளில் போட்டபடியே அவள் கையில் இருந்த பீடித்தட்டை இரண்டாக வளைத்து, சிதைத்துச் சின்னா பின்னப்படுத்தினார். பீடித் தூள்களை எடுத்து ஆகாயத்தை நோக்கி எறிந்தார். அந்தத் தூள்கள் தன் தலையிலேயே விழ, மகளை, தலையிலும் இடுப்பிலுமாகக் காலால் இடறினார். இதற்குள் பழனிச்சாமி ஓடிவந்து மாயாண்டியின் முதுகில் பலமாக அடித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/174&oldid=1243702" இலிருந்து மீள்விக்கப்பட்டது