பக்கம்:சாமியாடிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

சு. சமுத்திரம்

176 சு. சமுத்திரம்

இந்தச் சமயத்தில், ராமசுப்பு, நாட்டு வக்கீல், குள்ளக் கத்தரிக்காய் வகையறாக்கள் உள்ளே வந்து, பழக்கப்பட்ட இடங்களில் உட்கார்ந்தபடியே கோயில் காரியங்களைப் பேசத் துவங்கி விட் டார் கள் .... அவரும் அந் த ப சிக் கிற க் கத் தி லேயே பதிலளித்தார்."காலையில இருந்தே இவரு ஒரு டம்ளர் தண்ணிகூட குடிக்கலன்னு சொக்கார மச்சான்களிடமும், கொழுந்தன்களிடமும் சொல்வதற்காக, பாக்கியம் வாயைத் திறந்தாள். ஆனால் பேச்சோ, மூச்சு மாதிரி மேலும் கீழும் போய்க் கொண்டிருந்தது.

"எண்ணாச்சி மேளக்காரங்களுக்கு எங்க ஊட்ல சோறு பொங்குறோம். வில்லுப் பாட்டாளிகளுக்கு ஒங்க வீட்ல சோறு. சரிதானே."

பழனிச்சாமி, சரியில்லை என்பதுபோல் பேசினார்.

"மேளம். வில்லு. பொய்க்கால் குதிரைக்காரன் எல்லாருக்கும் இங்கேயே பொங்கிடலாம். தொழிலாளிவள பிரிச்சு சோறு போடப்படாது. எல்லாருமே மனுஷங்கதான். ஏய் பாக்கியம். நம்ம கொப்பரையை புளிய வச்சு தேச்சு கழுவுங்க. உருளைக்கிழங்கும் முட்டக்கோஸம் தனித்தனியாய் வையுங்க. போன வருஷம் மாதிரி என் சொல்ல தட்டுனது மாதிரியும் தட்டாதது மாதிரியும் ரெண்டையும் ஒரே பொறியலா போடாதிய. வயிறுன்னு வரும்போது காச பாக்கப்படாது. மானமுன்னு வரும்போது உயிரப் பாக்கப்படாது."

"எண்ணாச்சி நம்ம நாட்டு வக்கீல். பெரிய துணில போடுற சினிமா சங்கதி கரும்பட்டையான் பயலுவளுக்கு தெரிஞ்சு போச்சி. அவங்க அதவிட ரெண்டு மடங்கு துணில போடப் போறாங்கன்னு ஒரு பேச்சு அடிபடுதே."

"இதுக்குத்தான் நான் சொல்ல மாட்டேன். சொல்ல மாட்டேன்னு சொன்னேன். இவரு கேட்டாத்தானே.”

"இப்ப என்னடா குடி கெட்டுப் போச்சு. எதுக்கும் ஒரு ரெக்கார்ட் டான்ஸ் போட்டுட்டாப் போச்சு. எங்கண்ணாச்சி மொகத்த கழிக்காவ. வேண்டாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/178&oldid=1243706" இலிருந்து மீள்விக்கப்பட்டது