பக்கம்:சாமியாடிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

சு. சமுத்திரம்

178 சு. சமுத்திரம்

இருந்தேன். ஆனால் புத்தியக் கடன் கொடுத்துட்டேன். அந்தப் பய மவள் என்னடான்னா இந்த ரெண்டு நாளா குப்புறப் படுத்துக்கிட்டு அன்னம் தண்ணி இல்லாம கிடந்திருக்காள். இன்னைக்கு காலையிலதான் எனக்கு விஷயம் தெரியும். கேள்விப்பட்டதுல இருந்து மனசு கேக்கல. நானும் சாப்புடல. அதிகநேரம் கழிச்சுதான். பாக்கியத்துக்கிட்ட சொன்னேன். இப்போ கோலவடிவு அவளோட உண்ணாவிரதத்தை முடிச்சு வச்சுட்டு வந்திருக்காள்."

"பயமவள் சரியான அமுக்கடி கள்ளி.”

"கள்ளித்தனம் இல்ல. இதுக்குப் பேருதான் வீரம். வாடாப்பூ தனிப் பீடி சுத்தறது எனக்குப் பிடிக்கல. அதேசமயம் அவள் தனிப்பிறவின்னு பெருமைப்படாமலும் இருக்க முடியல..."

"காலச் சுத்துன பாம்பு மாதிரி. இந்த செம்பட்டையான் பயலுவ பிடிவாதத்துல ஊரே குட்டிச் சுவராப் போயிட்டு. இதுக்குல்லாம் இந்தப் பய துளசிங்கம்தான் காரணம். செறுக்கி மவனோட ஒத்தக் காலையோ, கையையோ எடுத்துட்டா சரியாப் போயிடும்."

கோலவடிவு, நாட்டு வக்கீல் நாராயணனிடம் ஏதோ சொல்லப் போவதுபோல் உதடுகளைக் குவித்தாள். "நீங்க நெனக்கது மாதிரி அவரு இல்லியாக்கும். அப்பா முன்னால சிகரெட் பிடிக்காதவராக்கும். அம்மன் கொடையை தள்ளி வச்சுக்கிட சம்மதிச்சுட்டார். கொடைக்கு இன்னும் முழுசா ரெண்டு நாளுதான் இருக்குது. இன்னும் தேதி வரலியே வரும். வரும். அவரு எல்லா முரடனுவளயும் சமாதானப் படுத்தனுமுல்லா. இதோ சித்தப்பாவும் பீடி. ஏசெண்டும். சிரிச்சுட்டு வாராவ. அநேகமா. துளசிங்கம் மச்சான் சுடலை மாடன் விசேஷத்தை தள்ளி வச்சிருப்பாரு.. இவங்க அதைச் சொல்ல வாராங்க. அப்பாடா... ஊர்த்தகராறு ஒழிஞ்சது.. இனுமே. எல்லாமே நல்லபடியாய் நடக்கும். பழச மறக்கணுமுன்னா புதுச நெனைக்கணும். புதுச நெனக்கணுமுன்னா பழச மறக்கணும். எம்மாடி நான் கூட கூட்டத்துல பேசலாம் போலுக்கே யார் கை தட்டலன்னாலும் துளசிங்கம் மச்சானும், அலங்காரி அத்தையும் தட்டுவாவ..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/180&oldid=1243709" இலிருந்து மீள்விக்கப்பட்டது