பக்கம்:சாமியாடிகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

179

சாமியாடிகள் 179

பீடி ஏசெண்டும், பழனிச்சாமியின் சொந்தத் தம்பி அருணாசலமும் உள்ளே வந்து உட்கார்ந்தார்கள். தம்பிக்காரர், சொக்காரர்களை நோட்டமிட்டபடியே பழனிச்சாமியிடம் பேசினார்.

"எண்ணாச்சி. ஒன்கிட்டே. நாங்க ரெண்டு பேரும். தனியா பேசணும். கோலவடிவு கல்யாண விஷயமாய்."

குள்ளக்கத்திரிக்காய் ராமசாமி, மற்றவர்கள் சார்பில் பேசினார். "அப்போ. நாங்க வர்றோம்." பழனிச்சாமி பதறியடித்துப் பேசினார். "உட்காருங்கப்பா. அருணாசலம். நீ ஏன் இப்படி புத்திய அடிக்கடி கடன் கொடுக்கே...? இவங்கெல்லாம் என்கிட்ட அவங்க குடும்ப விஷயத்தைச் சொல்லும்போது நம்ம குடும்ப விஷயத்த அவங்கள துரத்திட்டா பேசணும்.? இவங்களுக்குத் தெரியாத குடும்ப விஷயம் அப்படி என்ன இருக்கு. எதுன்னாலும் இங்கேயே சொல்லு."

"சொல்லுதேன், சொல்லுதேன். ஏழா கோலவடிவு நீ உள்ள போ."

அருணாசலம், அண்ணன் மகள் உள்ளே போகிறாளா என்று உற்றுப் பார்த்தபோது, அவள் கதவுக்குள் "அஞ்ஞான வாசம் செய்து காதுகளை உஷராக்கிக் கொண்டாள். அருணாசலம் பீடிகை போடாமலே பேசினார்.

"நம்ம ராமய்யா மச்சான் மவனுக்கு-அக்கினி ராசாவுக்கு கோலவடிவக் கேட்டு ஆளு மேல ஆளாய் சொல்லி அனுப்பி அலுத்துட்டாராம். இப்ப இவர கையோட கேட்டுட்டு வரும்படியாய் சொல்லி அனுப்பி இருக்கார் ராமய்யா மச்சான்."

"ஆவணிலதான் யோசிக்கலாமுன்னு சொல்லியாச்சே." ஏசெண்டு பதிலளித்தான்.

"அப்படில்ல மச்சான். நாங்க அந்த கோவில் விவகாரத்துல. ரத்த சம்பந்தத்துல ஒங்கள சப்போட்டு செய்யுறோம். ஆனால் ஊர்ல. கோலவடிவ பெண்ணெடுக்க அப்டிச் செய்யுதா ஒரு பேச்சு. இந்தப் பேச்ச ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/181&oldid=1243710" இலிருந்து மீள்விக்கப்பட்டது