பக்கம்:சாமியாடிகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

181

சாமியாடிகள் 181

"தப்பா நினைக்காதிய மச்சான். இப்பவே ஒரு முடிவு சொல்லிட்டா நல்லது."

பழனிச்சாமிக்கு அவர்கள் சொல்வதன் தாத்பரியம் புரிந்தது. ஆனாலும் அக்கம் பக்கம் பார்த்தார். எவரும் முனங்கவில்லை. பாக்கியத்தைப் பார்த்தார். அவள் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பழனிச்சாமி, சிறிது பதட்டப்பட்டே முடிவளித்தார்.

"சரி மாப்புள்ள... என் மகள், கோலவடிவுதான். பொண்ணு. ராமய்யா மச்சான் மகன் அக்கினி ராசாதான் மாப்பிள்ள ஆவணில கைமாத்திக்கலாம்."

"நீங்க பொண்ணு கொடுத்தா போதும். நகைநட்டு ரெண்டாம் பட்சம்."

"அவளுக்கு நகைபோட்டு பாக்கது எங்களுக்கும் பெருமதான். சரி என்னை கொஞ்சம் கண்மூட விடுதியளா.."

19

கோலவடிவு, சுவரில் போட்ட கரங்களை எடுத்துவிட்டு, அப்படியே கீழே சரிந்தாள். சரிந்தவள் கோபமாக எழுந்தாள். என்னப்பத்தி. என்னைக் கேட்காமலே எப்படி முடிவெடுக்கலாம். என்று அங்கேபோய் கேட்கலாம் போல் எட்டிப் பார்த்தாள். என்னைக் கேளாமலே எப்படிப் பெத்தாளோ.. அதுபோல கேளாமலே காவு கொடுக்காவ. எல்லாரும் ஊமையாயிட்டாவளே. அம்மாகூட பேசலியே. சித்தப்பா சந்திராவுக்கு இப்படி ஒரு மாப்பிள்ள பாப்பாரா. நான் தொக்கா. மாடா. ஆடா..? மனுஷி. வோட்டுப் போட்ட பொண்ணு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/183&oldid=1243713" இலிருந்து மீள்விக்கப்பட்டது