பக்கம்:சாமியாடிகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

சு. சமுத்திரம்

182 க. சமுத்திரம்

கோலவடிவின் கைகால்கள் ஆடின. தலையே பராமானது. கண்களே எரிச்சலாயின. அக்னிராசா. அவளை, அங்கம் அங்கமாக, அங்குலம் அங்குலமாக எரித்தான். காளியம்மனுக்கு ஆடு. கடலைக்குக் கோழி. இந்த ரெண்டு பேருக்குமா சேத்து நான். நானே. அப்பா வழக்காளி அப்பா. தகராறு சங்கதில மட்டும் ரெண்டு தரப்பையும் விசாரிக்கணுமுன்னு எப்படிப் பேகறியளோ அப்படி. சுபகாரியத்திலயும் விசாரிக்கணும். இல்லாட்டா ஒரு சுகம் இன்னொரு சோகத்தோட சேரும். இதனால சொகந்தான் சோகமாகுமே தவிர சோகம் சுகமாயிடாது. ஒங்க கிட்டே எப்படிச் சொல்ல. யார் மூலம் சொல்ல. அண்ணனுக்கு கடை வைக்கது முக்கியம். அம்மாவுக்கு நீங்க முக்கியம். நான்தான் - இந்தப் பாவிப்பொண்ணுதான் யாருக்கும் முக்கியமில்லாமப் போயிட்டேன். போயிட்டேனே.

கோலவடிவின் புலம்பிய நெஞ்சம் இறுகியது. மழையால் குழையும் கணிமண் தரை அப்புறம் இறுகுமே. அப்படி இறுகியது. பயம், வீரப்பிறப்பெடுத்தது. இந்த திடீர் மனமாற்றம் அவளுக்கே ஆச்சர்யத்தைக் கொடுத்தது. எதிர்பார்க்காத வைராக்கியம். எதிர் கொள்ளக்கூடிய துணிச்சல். கோயில் பேரேட்டு நோட்டில தன்னப்போல் ஒரு தாளை தனியாக்கினாள். பேனாவைத் தேடிப்பிடித்து நாலு வரிகளை கிறுக்குவதுபோல எழுதினாள். அலங்காரி அத்தையிடம் பேச முடியாமல் போனால் இதையாவது சேர்த்துடனும்.

"எம்மா. அம்மன் கோவிலுக்கு போயிட்டு வாறேம்மா."

பாக்கியத்துக்கு சந்தோஷம். மகளுக்கு அக்னி ராசாவ பிடிக்காதோ.. என்ற சந்தேகம் இப்போது அம்மாக்காரிக்கு, அணுவளவும்கூட இல்லை. பிடிச்சுட்டு. இல்லாட்டா கோவிலுக்குப் போகமாட்டாள். அம்மனுக்கு நன்றி சொல்லப் போறாள். அவளுக்கு பிடிச்சா எனக்கு பிடிச்ச மாதிரிதான். ஆனாலும் ஏதோ..

கோலவடிவு, அடிமேலடியாய் நடந்தும், அடியற்று நடந்தும், அடியோடு நடந்தும் குலதெய்வமான காளியம்மன் கோவிலுக்கு வந்தாள். அவள் எந்த நேரம் வந்தாளோ, அந்த நேரம் பார்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/184&oldid=1243714" இலிருந்து மீள்விக்கப்பட்டது