பக்கம்:சாமியாடிகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

சு. சமுத்திரம்

188 சு. சமுத்திரம்

குறி. கரும்பட்டையான்களே சரிக்குச் சரியான ஜோடி இப்ப அந்தப் பயலுவோட காத்துக் கருப்பனுவளும் ஒண்ணாச் சேர்ந்தா நம்ம கதி. அதோ கதிதான். ஆமா. இப்டிச் செய்தா என்ன.."

"எப்படி.."

"நம்ம சுடலைமாடன் வழக்கமா. கரும்பட்டையான் காளிகிட்ட உத்திரவு வாங்கப் போவாரு இந்த வருஷம் பேசாம காத்துக் கருப்பன் மாரியம்மன் கிட்ட உத்தரவு வாங்கச் சொல்லலாமே. இதனால் காத்துக்கருப்பன்கள வளைச்சுப் போட்டுடலாம் பாரு..."

"மாடன் மாரிகிட்ட உத்திரவு கேட்க சம்மதிப்பாரா.”

"நாம சொல்லுறதைத்தான் மாடன் கேட்கணும். மாடன் சொல்லுறதை நாம கேட்கணுமுன்னு இல்ல. அப்டிக் கேட்டா ஊர்ல ஒரு கிடா ஒரு கோழி உயிரோட இருக்காது. சரி. என் திட்டத்தைப் பற்றி என்ன சொல்லுதே."

"நல்ல திட்டந்தான். அதுக்காவ. அவனுவ காலுல போயி விழனுமான்னு யோசிக்கேன்."

"யோசிச்சு சொல்லு. அதோ பாரு வேனு. துளசிங்கம் பயல் கொடைக்கு சினிமாப் பயலுவள கூட்டிட்டு வாரான். கோணச்சத்திரத்துல ரூம் போட்டு குடிக்கதுக்கு. பிராண்டி போட்டு செறுக்கி மவன். உரக்கடைய ஒரு வழி பண்ணிடுவான். அலங்காரி. அலங்காரி. நீ சொல்லு. இதோட, அவன நிறுத்திக்கிடச் சொல்லு பிள்ள."

"நம்மளால முடியாது சாமி. அவன் கேட்காட்டா எனக்குத்தான் மதிப்புக்குறவு. பிறவு எதையுமே அவன் கிட்டே பேச முடியாது."

"என்ன அலங்காரி என்கிட்டயே பசப்பற. நீ சொல்லி அவன் கேட்கமாட்டானாக்கும். நீங்க ஒருத்தருக்கு ஒருத்தரா."

எலி டாக்டர் கம்மா இருந்திருக்கலாம். அப்படி இருக்காமல் ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார். கண்ணடித்தபடியே சொல்லடித்தார். அதைப் புரிந்து கொள்ள அலங்காரிக்குச் சிறிது நேரமானது. புரியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/190&oldid=1243734" இலிருந்து மீள்விக்கப்பட்டது