பக்கம்:சாமியாடிகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

189

சாமியாடிகள் 189

புரியப் புலியானாள். அவரிடம் இருந்து பின் வாங்கி நின்று, கத்தினாள்.

"ஏய் எலி டாக்டர். நீயுல்லாம் ஒரு மனுஷனா." "என்ன பிள்ள நீ நான்னு." "நீ சிரிச்ச சிரிப்புக்கும் பேகன பேச்சுக்கும் ஒன் மூஞ்சில காறித்துப்பணும். இப்படிப் பேசற நீ ஒம்மாவ அம்மான்னு கூட கூப்புடப்படாது. பேச்சுக்கும் ஒரு அளவு வேண்டாமய்யா. நான் பலபேர தொட்டவதான். கெட்டவதான். இல்லங்கல. ஒன் தம்பிய கட்டுன பிறவு ஒழுங்கா இருக்க நெனச்சவதான். அவன் தெம்மாடின்னு தெரிஞ்சதும் ஒரு சிநேகிதம் ஏற்பட்டதும் வாஸ்தவந்தான். இது தெரிஞ்சு நீ குதியாய் குதிச்சே. அப்போ நீ நியாயமா பேசியிருந்தா நானும் அடங்கியிருப்பேன். ஆனால் நீயோ. அவன்கிட்ட போறவள் என்கிட்ட வரப்படாதான்னுதான் ஆடுனே. அந்த ஆட்டத்துல நானும் ஆடிட்டேன். ஆடுறேன். நான் இப்படி ஆனதுக்கு நீயும் ஒரு காரணம். அதுக்காவ இப்டியா பேசுறது. காக்கா காக்காவக் கொத்தி தின்னாது. இப்பவே துளசிங்கத்துக்கிட்ட சொல்லுதேன் பாரு..."

"அய்யோ. அலங்காரி. நான் ஒன்ன அப்படிச் சொல்லுவனா. இந்த சுடல சத்தியமாச் சொல்லுதேன். நான் அப்டி நினைச்சிருந்தாக் கூட என் கையி விளங்காமப் போவும். காலு நடக்காமப் போவும். சொன்னவன் பழனிச்சாமி தம்பி அருணாசலம். தேவடியா மவன. நானே மிதிக்கப் போறேன். துளசிங்கம் பயல்கிட்ட சொல்லிடாத தாயி. இப்பவே அடிக்காத குறையா நாயப் பேசுறது மாதிரி பேசுறான். ஒரு நல்ல வாக்குக் கொடுத்துட்டுப் போ. அலங்காரி."

அலங்காரி, எதுவும் பேசவில்லை. வேனில் இறங்கியவர்களைப் ஊமைச் சோகமாய்ப் பார்த்தாள். பத்து பதினைந்து தடியன்கள் இறங்கினார்கள். ஒருவன் கையில் எட்டுக்கால் பூச்சி மாதிரியான வீடியோ காமிரா. ஒருத்தன் தோளில் மிருதங்கம் மாதிரியான சதுரப்பெட்டி.

துளசிங்கம் அவர்களைச் சித்திக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/191&oldid=1243735" இலிருந்து மீள்விக்கப்பட்டது