பக்கம்:சாமியாடிகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

சு. சமுத்திரம்

190 சு. சமுத்திரம்

"இவங்கெல்லாம் என்னோட சினிமா பிரண்டுங்க ஏய் தர்மராசா. இங்க வாடா டேய் மவராசா. நீயும் வா. இவங்க கூடவே நீங்க ரெண்டு பேரும் இருக்கணும் என்ன மாஸ்டர் அப்படிப் பார்க்கிய."

"ஒங்க கோவிலுல ரொம்பப் பெரிசா விசேஷம் இருக்கும். வீடியோவில எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பலாமுன்னு சொன்னே.. நானும் ஐயாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துட்டேன். இங்கே ஒண்ணு மில்லியப்பா. மெட்ராஸே மேலப்பா."

"நாளைக்கு பாத்துட்டு சொல்லுங்க. மாஸ்டர். அதுக்கு மறுநாள் கிளைமாக்ஸ். ரெண்டையும் பாருங்க. படமாய் எடுங்க. ஒங்களுக்கு பிடிக்காட்டா அட்வான்ஸ் அப்படியே தந்துடுறேன். அதோட ஒங்கள பிஸுனசுக்காக மட்டும் கூப்பிடல. எங்க விசேஷத்த நீங்களும் பார்க்கணுமுன்னுதான் கூப்பிட்டேன்."

மாஸ்டர் எதுவும் பேசாமல் தோளில் இருந்த காமிராவை எடுத்துத் தர்மராசாவின் தலையில் வைத்தான். தாடிக்காரன் ஒருத்தன். கண்ணும் வாயும் மட்டுமே வெளியே தெரியும். இரண்டு பேர் மொட்டையன்கள். எஞ்சிய பேர் நெட்டையன்கள். ஒருவன் லுங்கி. ஒருத்தன் பைஜாமா. இன்னொருத்தன் டவுசர்காரன். மற்றவர்கள் டைட் பேண்ட். பொம்மைச் சொக்காக்கள்.

சினிமாக்காரர்களில் ஒருத்தன் விசிலடித்தபடியே பேசினான்.

"டேய். அதோட பாருடா. ஒரு கிராமத்துக்குட்டி. அருமையான லொக்கேஷன்ல எப்படி அழகாய் நடக்காள் பாருட பாரதிராஜா பார்த்தா விடமாட்டாரு. அடடே. குட்டி எப்படி பார்க்குது பாரு. மாஸ்டர். காமிராவ ரெடி பண்ணு. மாஸ்டர் இந்த போஸ் பியூட்டிபுல் ஒண்டர்புல். அது பாதர்கிட்ட இப்பவே அட்வான்ஸ் கொடுத்துடலாம். ஷாட். ரெடியா..?"

எல்லோரும் தொலைவில் போன கோலவடிவையே பார்த்தார்கள். துளசிங்கம் மாஸ்டரிடம் கெஞ்சிக் கூத்தாடி காமிராவை விலக்கினான். 'இருக்கிற தொல்லை போதாதா. இந்தச் சமயத்துல. ஏன் அந்தப் பக்கமாய் போறாள். இவளுக்கும் அக்னி ராசாவுக்கும் கல்யாண்மாமே..?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/192&oldid=1243736" இலிருந்து மீள்விக்கப்பட்டது