பக்கம்:சாமியாடிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

சு. சமுத்திரம்

18 சு. சமுத்திரம்

நம்பி, ஒரு செத்த எலியை தூக்கி வச்சுக்கிட்டு. நான் டாக்டரு. இந்த எலியை ஊசி போட்டு பிழைக்க வைக்கேன் பார்னு சொல்லி அந்த எலியை கோணி ஊசியை வச்சி. குத்தோ குத்துன்னு குத்துனாராம். இந்த சட்டாம்பட்டிக்காரங்களுக்குச் சொல்லிக் கொடுக்கனுமா. வக்கணை வச்சுட்டானுவ... எலி டாக்டர்னு."

அலங்காரி நாடக பாணியில் பேசுவதை வாயாடாமல் கேட்ட பெண்கள் கலகலப்பாய்ச் சிரித்தார்கள். கோல வடிவு, துளசிங்கத்தைப் பார்த்தபடி குறுஞ்சிரிப்பாய்ச் சிரித்தாள். உடனே அவன், தான் சிப்பி வயிற்றில் பிறந்த முத்து என்பதை நிரூபிப்பது போல் பேசினான்.

"எங்கப்பன் கதையை விட்டுவிட்டு, என் கதையைக் கேளுங்க். பதினைந்து வயசுல சிகரெட்டு பிடிச்சேன்னு எங்கப்பா என்னை அடிச்சிட்டாரு. நான் வீட்ல இருந்த நூறு ரூபாயை எடுத்துக்கிட்டு டில்லி போனேன். கரோல்பாக்குல காய்கறிக்கடை போட்டேன். தேறல. கல்கத்தா போனேன். ஹோட்டல்ல சர்வரா இருந்தேன். முடியல. அப்புறம் பம்பாய்க்கு வந்து தாராவில நம்ம தமிழ் ஆள்கள் பகுதியில் இருந்தேன். ஆட்டோ ரிக்ஷா ஒட்டிக்கிட்டே, இந்திப் படங்கள்ல ஸ்டண்ட் வேடங்கள்ல நடிச்சேன்."

"ஒமக்கு ரஜினிகாந்த், கார்த்திக் மாதிரி சண்டை போடத் தெரியுமா?"

"அவங்களுக்கு என்னை மாதிரி சண்டை போடத் தெரியுமான்னு கேளு. அமிதாப்பச்சனுக்கே ஸ்டண்ட் ரோலுக்கு நான்தான் டுப். சிலம்பு, கத்தி, குஸ்தி. எல்லாம் அத்துபடி, இந்த ஊர்ல எவன வேணுமுன்னாலும் வரச்சொல்லு."

எல்லாப்பெண்களும் அவனை அதிசயித்துப் பார்த்தார்கள். கோலவடிவு, முன்பு அவன் ஸ்போர்ட் பேண்ட்டையும், டி சர்ட்டையும் பார்த்து, அவனை வான்கோழியாக நினைத்து மனதுக்குள் வைதவள்; இப்போது அவன் உடையையும், உடைக்குள்ளே இருந்த உடம்பையும் ரசித்துப் பார்த்துவிட்டு, தன்னைத்தானே திட்டிக்கொள்வதுபோல் மெல்ல முனங்கினாள். அலங்காரி அவனை ஏறிட்டுப் பார்க்காமலே கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/20&oldid=1243293" இலிருந்து மீள்விக்கப்பட்டது