பக்கம்:சாமியாடிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

19

சாமியாடிகள் 19

"திருஷ்டி பட்டுடப் போவுதுடா. இதுக்கு மேல எதுவும் சொல்லாத."

"எத்தே. உங்க மவன நாங்க தின்னுட மாட்டோம். அப்போ மச்சான் ஒமக்கு எல்லா சினிமா நடிகரும் பழக்கம் இருக்குமுல்ல."

"பழக்கம் இருக்குமா. எல்லாரும் என்னைப் பார்த்து மாஸ்டர் மாஸ்டர்னுதான் கூப்பிடுவாங்க."

'ஒம்ம உடம்புக்கு நீரும் சினிமாவுல நடிச்சிருக்கணும். இந்த ஊருக்கு வந்திருக்கப்படாது."

"கரெக்டா சொன்னே. ஆனால் நான் எங்கப்பா மாதிரி எலி டாக்டரா இருக்க விரும்பல. புலி டாக்டரா இருக்க விரும்பறேன். ஸ்டண்ட் தொழிலுல நடிச்சு நடிச்சு அலுத்துப் போச்சு. இனிமேல் நடிச்சால் ஹீரோ. இல்லன்னா வில்லன். சின்னச் சின்ன வேடத்துல நடிக்கப் பிடிக்கல. அதான் ஊருக்கு வந்துட்டேன். இப்போ மூணு லட்சம் சம்பாதிச்சாச்சு. ஒரு காலத்துல சினிமா எடுக்கத்தான் போறேன்."

"அப்போ பேசாம நம்ம ஊர்லயே ஒருத்திய கதாநாயகியாய் போடணும்."

"நீயே சொல்லு. யாரைப் போடலாம்."

"இந்தக் கேள்வியே கேக்கப்படாதுடா. நம்ம கோலவடிவை பக்கத்துல வச்சுக்கிட்டே கதாநாயகிக்கு ஆள் தேடுறது. கோலத்தோட அழக அவமானப்படுத்துறது மாதிரி. பாருடா. அவள் எப்படி வெட்கப்படுறாள்னு. பாரு. அதுலே எவ்வளவு அழகு இருக்குன்னு பாரு. இவள்தாண்டா ஒனக்கு கதாநாயகி."

துளசிங்கத்தோடு சேர்ந்து எல்லோரும் கோலவடிவைப் புதிய கோணத்தில் பார்த்தார்கள். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தது போல், அவள் சந்தோஷப்படவில்லை. துளசிங்கத்தைக் கோபமாய்ப் பார்த்த படியே, அலங்காரியிடம் சினந்து பேசினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/21&oldid=1243294" இலிருந்து மீள்விக்கப்பட்டது