பக்கம்:சாமியாடிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

சு. சமுத்திரம்

20 சு. சமுத்திரம்

"அலங்காரி அத்தே. ஒங்க மனசுல என்னதான் நெனச்சுக் கிட்டே? என்னைப்பத்தி. எவ்வளவு தப்புக் கணக்கு போட்டுட்டே எங்கப்பாகிட்ட சொல்லுறேன் பாரு..."

எதற்கும் ஆடாத அலங்காரி, கொஞ்சம் ஆடித்தான் போனாள். அந்த மாற்றத்தைக் காட்டுவதுபோல், ஆலமரத்தின் கைபோலான ஒரு விழுதின் விரலைப் பிடித்தபடியே, கோலவடிவைப் புரியாதவள் போல் பார்த்தாள். அவளுக்குக் கொஞ்சம் பயமெடுத்தது. இந்தக் கோலவடிவின் தந்தை பழனிச்சாமி, கரும்பட்டையான் குடும்பத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படாத தேர்ந்தெடுக்க அவசியமில்லாத - தலைவர். வம்புச் சண்டைக்கும் போகவும் மாட்டார். வந்த சண்டையை விடவும் மாட்டார். அதோடு, இவள் வீட்டு வாசல் கதவைத் தட்டாத ஒரே ஒரு பெரிய மனிதர் அவர்தான். அலங்காரி ஒரு தடவை லிமிட்டை அதிகமாகத் தாண்டுகிறாள் என்று நினைத்து, அவள் வாழ்க்கைப்பட்ட செம்பட்டையான் குடும்பத்து சொக்காரர்கள், அவளை அடிக்கப்போன போது, கண்ணால் காணாமல், காதால் கேளாமல், தீர விசாரிக்காமல் ஒரு பெண் மேல பழி போடப்படாதுடன. எம்மாளு நீயும் பழி வாராது மாதிரி நடக்கப்படாது என்று அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்தவர். அவர் சொன்ன சொல்லுக்கு மதிப்பு கொடுத்தோ, அல்லது அடிக்க வந்த சொக்காரர்களில் பலர் அவளது ராத்திரியாட்ட சொக்கட்டான்கள் என்பதாலோ, அவளை அடிக்காமலே போய்விட்டார்கள்.

என்றாலும் இந்த பங்காளிப் பயல்கள் எதிர்காலத்தில் அவளை அடிக்க, பிடிக்க வரமாட்டார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. அப்போதெல்லாம் இந்தப் பழனிச்சாமிதான் அவளுக்குப் பாதுகாப்பாக இருப்பார். காரணம் பழனிச்சாமியின் கண் இவள் நடத்தையை ஒருவேளை பார்த்து விட்டாலும், அவர் காதில் எதையாவது சொல்லி மழுப்பிவிடலாம். காதால் கேட்டாலும், அவர் கண்ணை, தன் கண்ணிரால் மறைத்துவிடலாம். தீர விசாரணை என்பது, இந்தச் சட்டாம்பட்டியில் நடக்காத காரியம். விவகாரம் என்று வந்துவிட்டால், சின்னய்யா மகன் என்ன நியாயத்தைச் சொல்வானோ, அதற்கு எதிர் அநியாயத்தை பேசுபவன் பெரியய்யா மகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/22&oldid=1243295" இலிருந்து மீள்விக்கப்பட்டது