பக்கம்:சாமியாடிகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

சு. சமுத்திரம்

202 சு. சமுத்திரம்

ஒரு நாளைக்குக் கேள்வி கேட்கத்தான் போகுது. அப்போ கேள்விக்கான பதிலும் தானா வரும். ஒனக்காக ஒரு இடம் எப்பவும் தயாராய் இருக்கு வாடாப்பூ. நான் அமைக்கப் போற சங்கத்துல முதல் பேரே ஒன் பேர்தான். வாடாப்பூ."

வாடாப்பூ, அந்தப் பேருக்கு உரியவளாய்ச் சிரித்தாள். பிறகு ஏதோ பேசப் போனாள். அன்பிற்கு அடைக்கும் தாழில்லை என்று யார் சொன்னது? அவள் அன்புப் பிரவாகத்தில் வெளிப்பட்டு வார்த்தைகளுக்கு அழுகை தாழிட்டது, கண்ணிர் போட்டியிட்டது. அவர்களைப் பார்த்துச் சோகச் சிரிப்போடு, சுந்தரப் பார்வையோடு அவர்கள் கண்களுக்கு சின்னச் சின்ன உருவமாகி நடந்தபோது

ரஞ்சிதம், அவள் பின்னால் நடந்தாள். "ஒரு நொடி நில்லு" என்று கூவியபடியே வாடாப்பூவைப் பின் தொடர்ந்தாள். கோல்வடிவு விவகாரத்தை இவள் மூலமாக, தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியப்படுத்தியாக வேண்டும். திருமலையிடம் பட்ட அவமானத்தைக் காரணமாக்கி, கோலவடிவின் மானம் போவதற்கு மெளன சம்மதம் கொடுக்கலாகாது.

ஆனாலும் இந்தத் திருமலை என்ன பேச்சு பேசிவிட்டான். உரிமையோடு மோட்டார் பைக் முன்னால் போய் நின்றால், அதாலயே மோதுவது மாதிரி வண்டியை உறும வைத்தான். கோலவடிவு விஷயமாய் கோவிலுக்குள்ள போய் பேசணுமுன்னு எப்டி பேசிட்டான். கோலவடிவப் பத்தி பேச எனக்கு தகுதி இல்லியாம். அவள், என்ன மாதிரி கண்டவன்கிட்ட பல்லைக் காட்ட மாட்டாளாம். நான் அவன்கிட்ட, "என்னை கட்டிக்க சம்மதமான்னு" வெட்கம், மானம், சூடு, சுரனை இல்லாமல் கேட்டது மாதிரி எவன் கிட்டயும் கேட்க மாட்டாளாம். நான் செம்பட்டையான் குடும்பத்து ஏசெண்டாம். துளசிங்கத்துக்கும் எனக்கும் ஏதோ இருக்கணுமாம். இல்லாட்டா செம்பட்டையான் பொண்ணுவளுக்காவ ஏசெண்டுகிட்ட சண்டைக்குப் போயிருக்க மாட்டேனாம். அடேயப்பா.

இவ்வளவு ப்ேச்சுக் கேட்ட பிறகும், இவன் தங்கச்சிக்காவ யோசிக்கணுமா? இது தேவையா? யோசிக்கனுந்தான். தேவைதான். நான் சொன்னது மாதிரி நடந்துட்டு பாருன்னு நம்மையே நாம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/204&oldid=1243749" இலிருந்து மீள்விக்கப்பட்டது