பக்கம்:சாமியாடிகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

சு. சமுத்திரம்

206 சு. சமுத்திரம்

உள்ளே ஒடுங்கி இருந்தவன்களைப் பார்த்து அதட்டினார். காரைவீட்டுக் குடும்பத்தின் அண்ணாவி.

"இறங்குங்கல. எங்க பொண்ணுங்களப் பத்தி என்னல நெனச்சிய."

"இவங்க ஊரையே அடிக்க வந்த பயலுவப்பா... நம்ம பொண்ணுவள கையாட்டி நம்மள வம்புச் சண்டைக்கு கூப்புடுறாவனுவ. ஏல செறுக்கி மவனனுவள. இறங்குறியளா. இறக்கணுமா..."

"இதுக்குல்லாம் காரணம். இந்த துளசிங்கப் பயல். அவன இழுத்துக் கிடத்தணும். மல்லாக்கப் போட்டு வயித்துல மிதிக்கணும். டேய். ஒரு அஞ்சாறு பேரு போயி. அந்தப் பயல எங்க இருந்தாலும் இழுத்துட்டு வாங்கடா. நம்ம ஊரு பொண்ணுங்க கையப் பிடிச்சு இழுக்கலாமுன்னு அந்தப் பயலே இந்தப் பயலுவளகுக்கு சொல்லிக் கொடுத்திருப்பான். ஏய். சீக்கிரமாய் போய் இழுத்துட்டு வாங்கல."



23

வியாழக்கிழமை இரவு ஒன்பது மணி என்பதை உறுதிப்படுத்துவது போல் தொலைக்காட்சிப் பெட்டியில், தமிழ்ப் பெண் ஒருத்தி மறைந்து, ஒரு இந்திப் பெண் தோன்றினாள்.

பழனிச்சாமி வீட்டில் கல்யாணம் நடப்பதுபோல் பந்தி நடந்தது. வில்லுப் பாட்டாளிகள், மேளக்காரர்கள், (பதினாறு எம்.எம். காரர்கள் ஏனோ வரவில்லை) பந்தல்காரர்கள், ஒலிபெருக்கிக் காரர்கள், இவர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்தவர்கள், அட்வான்ஸ் நிச்சயித்தவர்கள், பண்ணையாட்கள் என்று பல்வேறு தரப்பினர், பல்கிப் பரவி, பாய்களில் உட்கார்ந்து வாழை இலைகளை வழித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/208&oldid=1243755" இலிருந்து மீள்விக்கப்பட்டது