பக்கம்:சாமியாடிகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

சு. சமுத்திரம்

208 சு. சமுத்திரம்

மேல பிரிஞ்சதில்ல. எங்கப்பா முகத்த ஒரு நாளைக்கு முப்பது தடவையாவது பாக்காட்டா அது எனக்கு நாளே கிடையாது. எனக்காவ அரிவாளைத் தூக்குன அண்ணா. இவனுக்கு நானே அரிவாளாயிடப்படாதே போக மாட்டேன். எங்கேயும் போகமாட்டேன். யார்கூடவும் போகமாட்டேன். போகவே மாட்டேன்.

கோலவடிவு, மூச்சைப் பிடித்திழுத்து, முன்னெற்றிச் சுருக்கங்கள் கலைய, பதட்டம் லேசாய் அடங்க, அம்மாவின் பாதத்தைப் பிடித்த கைகளைத் துக்கி, மடியில் போட்டபடியே மனதை வைராக்கியப் படுத்தினாள். அங்கே நடந்த பேச்சுக்களின் ஒலியை மட்டும் உள்வாங்கி, அதன் உட்பொருள் புரியாமல் இருந்தவள், திடீரென்று காதுகளைக் கூர்மைப்படுத்தினாள். மத்தியானமே காற்றில் வந்த செய்திக்கு, நாட்டு வக்கீல் நாராயணன் வர்ணனை கொடுத்தான்.

"காத்துக்கருப்பன் குடும்பத்த கலுகமூட்டி பிரிச்சுட்ட பெருமையில எலி டாக்டர் நின்னாரா. அப்போ பார்த்து அந்த வேன் டயர நம்ம திருமலை காற்றப் பிடுங்கி விட்டானா. வேனுக்குள்ள இருந்த பயலுவ பித்துப் பிடித்துப் போய் இருந்தாங்களா. அப்புறம் கையெடுத்து கும்பிட்டபடியே இறங்குனாங்க.. கூட்டம் அவங்கள அடிக்கப் போச்சுதா. உடனே எலி டாக்டர் என்ன பண்ணுனாரு தெரியுமா."

"தெரியுமான்னு தெரிஞ்சவன் கேட்டா. என்னடா அர்த்தம். சொல்லு."

"எலி டாக்டர் தரையில அப்படியே நெடுஞ்சாண் கிடையா விழுந்துட்டாரு கூட்டத்துக்கு முன்னால நல்ல பாம்பு படமெடுத்து காட்டுறது மாதிரி. படுத்தபடியே ஜனங்கள கையெடுத்துக் கும்பிட்டாரு..."

"மானங்கெட்ட பய."

"நீ வேற, அப்டி மட்டும் அவரு கும்பிடாட்டா. மெட்ராஸ்காரனுவள ஊர்க்காரங்க உண்டு. இல்லன்னு பிச்சி எடுத்திருப்பாங்க. ஒரு எலும்புகூட மிச்சம் இருந்திருக்காது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/210&oldid=1243757" இலிருந்து மீள்விக்கப்பட்டது