பக்கம்:சாமியாடிகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

209

சாமியாடிகள் 209

"அப்புறம்."

"துளசிங்கம் சேக்காளிவ, கோணச்சத்திரத்துக்கு ஒடிப் போயிட்டாங்களாம். இதுல ஒண்னு தெரியுமா..? இதுக்குல்லாம் காரணம் துளசிங்கமுன்னு அவனைப் பிடிச்சு வாரதுக்கு காத்துக் கருப்பன் பற்குணம், காரை வீட்டுக்காரன் வாலன், இன்னும் சிலருமா ஒடுறாங்க. எலி டாக்டர் இவங்க பின்னால ஓடினாரு துளசிங்கம் கிடைக்கல. எப்படியும் ரயில்வே பாலம் பக்கம் வருவான்னு நாலைஞ்சு பேரு. அவனுக்குன்னே அரிவாள வச்சுட்டு காத்து இருக்காங்க. துளசிங்கத்துக்கு அநேகமாக ஒத்தக் கையாவது, காலாவது போயிடும். நாம செய்ய வேண்டியத காளியாத்தா வேற ஆள்மூலம் செய்ய வைக்கிறாள். துளசிங்கம் பய தொலைஞ்சிட்டாமுன்னு தோணுது."

"இதனாலதான். பெரிய சினிமாவ மறந்துட்டியா?”

"ஊர்ல இதவிடப் பெரிய சினிமா நடக்கப்போவுது. துளசிங்கம் பய வசமா மாட்டிக்கிட்டான். இந்நேரம் முடிச்சிருப்பாங்க.."

பழனிச்சாமி, ராமசுப்புவையும், நாட்டு வக்கீலையும் செம்பட்டை யான்களைப் பார்ப்பது போல் பார்த்தார். சுடச்சுட, சூடுபோட்டுப் பேசினார்.

"ஒருவன அடிக்கிறதும். பிடிக்கிறதும். மனுஷத் தன்மையில்லடாகல்ல எறியுறவனுக்கு ஒரு நிமிஷம், அதனால கஷ்டப்படுறவனுக்கு ஒரு யுகம். இதுல உடம்புக் கஷ்டத்தைவிட மனக்கஷ்டம் இருக்கே. அது சொல்லி மாளாது. துளசிங்கத்த ஒரு காலை எடுத்துட்டாங்கன்னே வச்சுக்க அவன் ஒத்தக் காலுல நொண்டியடிச்சு நம்ம வீட்டுப் பக்கமா நடந்து போறான்னு வச்சுக்க நம்மள. நீங்களும் ஒரு காரணம் என்கிறது மாதிரி பரிதாபமா பாக்கான்னு வச்சுக்க. ஒன்னால தாங்க முடியுமோ என்னமோ.. என்னால தாங்க முடியாது. சில பேச்சு பேச்சுக்குன்னே இருக்கு. காரியத்துக்காவ இல்ல. பாக்கியம் எழுந்திருக்காத எனக்கு பசிக்கல."

"பாத்தியாப்பா. ஒங்க அண்ணாச்சிய. அவர இனும சாப்புட வைக்கது ஒங்க பொறுப்பு."

$4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/211&oldid=1243759" இலிருந்து மீள்விக்கப்பட்டது