பக்கம்:சாமியாடிகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

சு. சமுத்திரம்

210 க. சமுத்திரம்

‘என்ன அண்ணாச்சி. வாலன், துளசிங்கத்தோட மோதப் போனால் நாம் என்ன செய்ய முடியும்."

"ஒரு குற்றம் நடக்குமுன்னு தெரிஞ்சும் அதை தடுக்காம இருக்கது பெரிய குற்றம். சரி. சரி. ஒடுங்க. வாலனையும், பற்குணத்தையும் எங்க இருந்தாலும் தேடிப்பிடிச்சு இங்க கூட்டி வாங்க. நீங்க போறியளா. நான். போவட்டுமா."

"எப்பா. சீக்கிரமா கூட்டிவாங்க. இல்லாட்டா ஒங்கண்ணாச்சி புறப்பட்டு போவாரு."

"ஊர்சனமே கொதிச்சு நிக்குது. அதுக்கு நாம என்ன பண்ண முடியும். எப்படியோ போயிட்டு வாறோம். அண்ணாச்சிக்காவ. போறோம். அதுக்குள்ள முடிஞ்சுட்டுன்னா நாங்க ஜவாப் இல்ல."

"ஓங்க பேச்ச தட்டாமப் போயிட்டாங்கல்ல.? அவங்க அடாபிடி பண்ணுமுன்னால தடுத்துடுவாங்க. நீங்க சாப்புடுங்க.."

"அப்டி இல்ல பாக்கியம். என்னப் பத்தி தெரிஞ்சிருந்தும். என் முன்னால இதையெல்லாம் பேசலாமுன்னு அவங்களுக்கு ஒரு எண்ணம் வந்துட்டுப் பாரு..."

"சரி. மனச கலங்கவிடாதீங்க. நல்ல வேள நமக்கு வார மருமவனாவது அப்பிராணி. வம்புதும்பு பேசாதவன்."

பழனிச்சாமி பதில் சொல்லாமல் இருந்தார். எஞ்சியிருந்த பங்காளிகள் கோவில் காரியங்களைப் பார்க்கப் போய்விட்டார்கள்.

அப்பாவையே அதிசயித்து பார்த்த கோலவடிவு, அவருக்கு மகளாகப் பிறந்த பெருமிதத்தில் நெகிழ்ந்து போனாள். அதே சமயம், சட்டென்று ஒரு எண்ணம் அவள் மனதில் முள்ளாகியது. துளசிங்கம் மச்சாணை ஒண்னு கிடக்க ஒண்னு செய்துடுவாங்களோ, மெட்ராஸ் பயலுவ அப்டி நடந்துக்கிட்டா. அவரு என்ன பண்ணுவாரு. அய்யய்யோ அவரு ஒத்தக் காலுல நடக்க வேண்டியது வருமோ. அதை இந்தப் பாவி கண்ணால பாக்க வேண்டியது வருமோ. எப்பா. எப்பா. நீங்களும் எழுந்திரிச்சு போங்கப்பா. அவர காப்பாத்துங்கப்பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/212&oldid=1243761" இலிருந்து மீள்விக்கப்பட்டது